இந்திய திரையுலகின் நட்சத்திர நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட இந்திய மொழிகளில் பல முன்னணி நட்சத்திர நாயகர்களுடன் இணைந்து கதாநாயகியாகவும் முன்னணி கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

முன்னதாக காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருங்காப்பியம் மற்றும் கோஷ்டி உள்ளிட்ட திரைப்படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில், நடன  இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து காஜல் அகர்வால் நடித்துள்ள ஹே சினாமிகா திரைப்படம் கடந்த மார்ச் 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தொடர்ந்து தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் ராம்சரணுடன் இணைந்து காஜல் அகர்வால் நடித்துள்ள ஆச்சாரியா திரைப்படம் வருகிற ஏப்ரல் 29-ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் பாலிவுட்டில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள உமா மற்றும் தமிழில் பாரிஸ் பாரிஸ் ஆகிய திரைப்படங்களும் விரைவில் ரிலீசாக காத்திருக்கின்றன.

கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபரான கௌதம் கிட்சுலுவை காஜல் அகர்வால் திருமணம் செய்துகொண்டார். மேலும் தற்போது நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு வளைகாப்பு நடைபெற்றது. முன்னதாக கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களை எவ்வாறு சமாளிக்க வேண்டும், என பல முக்கிய தகவல்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில்  நடிகை காஜல் அகர்வால் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஃபோட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் இரண்டாக்கி வரும் காஜல் அகர்வாலின் அந்த புகைப்படங்கள் இதோ…
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gautam Kitchlu (@kitchlug)