தமிழ் திரையுலகின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராகவும் ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் நடிகர் சூர்யா சிறந்த தயாரிப்பாளராகவும் தொடர்ந்து ரசிகர்ளுக்கு நல்ல படைப்புகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் கடைசியாக சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று உலக அளவில் கவனிக்கப்பட்டது.

சூர்யாவின் நடிப்பில் கடைசியாக சூரரைப்போற்று & ஜெய்பீம் என வெளிவந்த படங்கள் OTT யில் ரிலீஸான நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகளில் ரிலீஸானது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம். இயக்குனர் பாண்டிராஜ் எழுதி இயக்கியுள்ள எதற்கும் துணிந்தவன் திரை படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் அவர்கள் தயாரித்துள்ளார்.

கடந்த மார்ச் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸான எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகை பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், வினய், சரண்யா பொன்வண்ணன், சூரி, M.S.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், இளவரசு, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஒளிப்பதிவில். இசையமைப்பாளர்  டி.இமான் இசையமைத்துள்ளார். எதற்கும் துணிந்தவன் படத்தை  ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட  ரிலீஸான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் குறிப்பாக பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் டிக்கெட்டுகளுக்கு ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக எதற்கும் துணிந்தவன் வெற்றிநடை போடுவதாகவும் சென்னையில் உள்ள பிரபல தனியார் திரையரங்குகளான ரோகினி சில்வர் ஸ்கிரீன் மற்றும் ராம் முத்துராம் சினிமாஸ் ஆகிய திரையரங்குகளின் உரிமையாளர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். வைரலாகும் அந்த ட்விட்டர் பதிவு இதோ…