அம்மா மினி கிளினிகை , அவரவர் தொகுதியில் திறந்து வைக்கும் பணியில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் பரப்பரப்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் கே.பி.முனுசாமி செய்தியாளர்கள் சந்திப்பில், ‘’ எங்கள் தலைமை முடிவு செய்த எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளர் . ஓபிஎஸ் கூறிய வேதவாக்கு எங்கள் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். இதில் யார் இடையூறாக வந்தாலும் ஒதிக்கிவைத்து விடுவோம்.

 
புதிய கட்சி தொடங்க வரும் அனைவரும் எம்.ஜி.ஆர் ஆட்சி தான் அமைப்போம் என்று கூறுகிறார்கள். கலைஞர் என்று யாறும் கூறுவதில்லை. பொங்கல் பரிசுகளை அரசு, அதிகாரிகள் முலம் தான் வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக மட்டுமே பொங்கல் பரிசுகளை கொடுக்கிறது. அது எதிர்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை அதனால் அதைவைத்து அரசியல் செய்கிறார்கள்” என்றார்.