பாலான தொழில் செய்து மாட்டிக்கொண்ட பெண் ஒருவர், சிக்கிக்கொண்ட போலீசாரிடம் “ஒண்ணு என்ன சார், இன்னும் 2 பொண்ணு உங்களுக்கு நான் அனுப்பி வைக்கிறேன்” என்று, பேரம் பேசி தப்பிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள மீரா ரோட் என்னும் பகுதியில் 50 வயதான பெண் ஒருவர், அந்த பகுதியைச் சேர்ந்த பல பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்திருக்கிறார். 

அத்துடன், அந்த பகுதியில் சாலையின் ஓரமாக இருந்து ஒரு தனியார் தங்கும் விடுதியில் தொடர்பு வைத்துக் கொண்டு, அங்கு வைத்தே இந்த பாலியல் தொழிலை அந்த பெண் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், அந்த தனியார் விடுதியில் பாலியல் தொழில் நடப்பது பற்றி மும்பை காவல் துறையினருக்கு ரகசிய புகார்கள் வந்து உள்ளது.“

இந்த புகார்கள் தொடர்பாக ரகசியமாகக் கண்காணித்து வந்த போலீசார், அந்த விபச்சார கூட்டத்தை வளைத்துப் பிடிக்கத் திட்டம் போட்டனர்.

அதன் படி தனிப்படை போலீசார் மற்றும் காவல்துறையின் மனித கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோர் சேர்ந்து கடந்த 21 ஆம் தேதி அந்த மீரா ரோட்டில் இருக்கும் தனியார் விடுதியில் ரெய்டு நடத்தி உள்ளனர்.

அந்த ரெய்டில் போலீசார் மாறு வேடத்தில் ஒரு வாடிக்கையாளர் போல சென்று இருக்கிறார். அப்போது, அந்த தனியார் விடுதியில் சென்ற அவர், அங்கு ரூமெடுத்து தங்கி உள்ளார். அதன் பிறகு பாலியல் தொழில் செய்யும் பெண்ணுக்கு போன் செய்து, உல்லாசத்திற்கு ஒரு பெண் அனுப்பிவைக்கக் கேட்டு இருக்கிறார். 

இதைக் கேட்டு சந்தோஷமான அந்த பெண், அவரிடம் எவ்வளவு பணம் என்று விலை பேசி இருக்கிறார். இப்படியாக, ரேட் பேசி முடித்ததும், ஒரு பெண்ணோடு மேலும் 2 பெண்களைக் கூட்டிக் கொண்டு அந்த தனியார் விடுதிக்கு அந்த பெண் வந்திருக்கிறார். அப்போது, மாறுவேடத்திலிருந்த அந்த போலீசார், அந்த பெண்களை மீட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். 

அதன் தொடர்ச்சியாக, பாலியல் தொழில் நடத்தி வந்த அந்த பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அப்போது, கைது செய்த போலீசாரிடம் அந்த பெண் பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், எந்த வித ஆசைக்கும் மயங்காத போலீசார், அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.