2017 தீபாவளிக்கு வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்த திரைப்படம் மெர்சல்.தளபதி விஜய் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடித்திருந்தார்.அட்லீ இந்த படத்தை இயக்கியிருந்தார்.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.தேனாண்டாள் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.தீபாவளி ரிலீஸ்.மூன்று வேடங்களில் விஜய்.ஏ.ஆர்.ரஹ்மான் என்று அனைத்தும் ஒன்று சேர்ந்து வர இந்த படம் பிற படங்களின் ரெகார்ட்களை உடைத்தெறிந்து விஜயின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது

எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.சமந்தா,காஜல் அகர்வால்,நித்யா மேனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தனர்.வைகைப்புயல் வடிவேலு,சத்யராஜ்,கோவை சரளா,யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த படம் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த 100ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படம் விமர்சகர்கள்,மற்றும் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது.யூடியூப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் இந்த படத்தின் பாடல்கள் பல சாதனைகளை படைத்துள்ளன.இந்த படத்தின் செம ஹிட் அடித்த பாடலில் ஒன்று ஆளப்போறன் தமிழன்.

பல தமிழர்களின் உணர்வுகளை இந்த பாடல் வெளிப்படுத்த ஒட்டுமொத்த தமிழர்களும் இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர்.ஏற்கனவே 100 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய இந்த வீடியோ பாடல்.தற்போது 150 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.இதனை ரசிகர்கள் ட்ரென்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.