தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவரான நடிகர் வெற்றி, 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளிவந்த 8 தோட்டாக்கள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து இயக்குனர் V.J.கோபிநாத் இயக்கத்தில் நடிகர்  வெற்றி நடித்து வெளிவந்த அடுத்த திரில்லர் படமான ஜீவி திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வெற்றியின் அடுத்த திரைப்படமாக திரைக்கு வருகிறது வனம்.

கோல்டன் ஸ்டார் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்தன் ஆனந்த் எழுதி இயக்கியிருக்கும் வனம் திரைப்படத்தின் நடிகர்  வெற்றியுடன் இணைந்து அனுசித்தாரா , ஸ்மிருதி வெங்கட் மற்றும் வேலராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விக்ரம் மோகன் ஒளிப்பதிவில், ரான் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார்.

வெற்றி நடிப்பில் மிஸ்டரி த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.விரைவில் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள வனம் படத்தின் விறுவிறுப்பான ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.