தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராகவும் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படம் பீஸ்ட். கோலமாவு கோகிலா & டாக்டர் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

சன் பிக்சர்ஸ், கலாநிதி மாறன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க யோகிபாபு, டாம் ஷைன் சாக்கோ, ஜான் விஜய், VTV கணேஷ், அபர்ணா தாஸ் ஆகியோருடன் இணைந்து இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதயைடுத்து  தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 66 திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷ்-ன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் தயாரிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார் என சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 129 உறுப்பினர்களை தளபதி விஜய் கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தளபதி விஜய் வெற்றி பெற்ற உறுப்பினர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியானது. அந்தப் புகைப்படம் இதோ...