தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் “தல” அஜித்குமார். அடுத்ததாக அஜித் குமார் நடிப்பில்  வெளிவரவுள்ள திரைப்படம் வலிமை. சதுரங்கவேட்டை, தீரன் மற்றும் நேர்கொண்டபார்வை படங்களை இயக்கிய இயக்குனர் H.வினோத் வலிமை படத்தை இயக்கியுள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள வலிமை திரைப்படத்தில் தல அஜித்குமார் உடன் இணைந்து ஹூமா குரேஷி, யோகி பாபு, விஜய் டிவி புகழ் ஆகியோர் நடிக்க, மிரட்டலான வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார்.

முன்னணி ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா ஒளிப்பதிவில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமான வலிமை படத்திற்கு திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் வெளியான வலிமை மோஷன் போஸ்டர் மற்றும் Glimpse ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த ஆண்டு (2022) பொங்கல் வெளியீடாக வருகிற ஜனவரியில் வலிமை திரைப்படம் ரிலீஸாகவுள்ள நிலையில் தல அஜித் குமாரின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பைக் ரைடிங்-ல் அதிக ஆர்வமுள்ள அஜித்குமார் நீண்ட தூர பயணமாக தனது அடுத்த பைக் ரைடிங்கை சமீபத்தில் தொடங்கினார். இந்நிலையில் இந்த பயணத்தின்போது தல அஜித் குமார் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரென்டாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ…