ராஜஸ்தானில் பட்டியலின சிறுமியை கத்தி முனையில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 3 சிறுவர்கள், அதனை வீடியோ எடுத்து வெளியிட்டதால் பாதிக்கப்பட்ட சிறுமி கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார்.

இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றங்கள் தொடர்ந்து அதிகாரித்து காணப்படுகின்றன. குறிப்பாக, வட மாநிலங்களில் தான், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

அதாவது, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலூர் என்கிற மாவட்டத்தில் 3 சிறுவர்கள் சேர்ந்து, அந்த பகுதியில் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு ஆடு மேய்க்கச் சென்ற பட்டியலின சிறுமியை கத்தி முனையில் மிரட்டி, தங்களது பாலியல் இச்சைக்கு இணங்கும் படி மிரட்டி உள்ளனர். கழுத்தில் வைக்கப்பட்ட கத்தியால், அந்த அப்பாவி சிறுமிக்கு அப்போது வேறு வழி தெரியாததால், அந்த சிறுமியால் எதிர்த்துப் போராட முடியவில்லை. 

இதனால், காம வெறிபிடித்த அந்த 3 சிறுவர்களும், 18 வயது கூட பூர்த்தியாகாத அந்த சிறுமியை மாறி மாறி 3 பேருமாக சேர்ந்து வெறித் தீர பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். அத்துடன், வக்கிரத்தின் உச்சமாக, சம்பவம் நடந்த அன்று பாலியல் பலாத்காரம் செய்தவர்களில் ஒருவன், இந்த பாலியல் பலாத்கார காட்சிகளை வீடியோ எடுத்து உள்ளான். 

மேலும், “இந்த பலாத்காரம் சம்பவம் குறித்து வெளியே சொன்னால், இந்த வீடியோவை ஊர் முழுவதும் பரப்பி விட்டு விடுவோம்” என்று, சிறுமியை மிரட்டி உள்ளனர். இதனால், மனாத்திற்கும், குடும்ப கவுரவத்திற்கும் பயந்த அந்த சிறுமி கடந்த 4 மாதங்களாக இது பற்றி யாரிடமும் எதுவும் கூறாமல் இருந்து உள்ளார். 

இதன் காரணமாக, “சிறுமி தங்களுக்குப் பயந்து விட்டார் என்ற முடிவுக்கு வந்த அந்த சிறு வயதிலே பழுத்த 3 பிஞ்சுகளும், மீண்டும் அந்த சிறுமியை மிரட்டத் தொடங்கி உள்ளனர். இந்த முறை, அந்த சிறுமியை அனுபவிப்பதை விட்டுவிட்டு, அந்த சிறுமியின் தோழிகளை அறிமுகம் செய்ய கூறி, அந்த சிறுமியை தொடர்ந்து மிரட்டி வந்து உள்ளனர். ஆனால், அந்த சிறுமியோ, இந்த நரக வேதனை என்னுடனே இருக்கட்டும் என்று விடா விடியாக யாரையும் அறிமுகம் செய்யாமல் அப்படியே உறுதியாக இருந்து உள்ளார். இதனால், கோபம் அடைந்த அந்த 3 சிறுவர்களும், “நீ உன் தோழிகளை எங்களுக்கு அறிமுகம் செய்ய மறுத்தால், உன்னை பலாத்காரம் செய்த அந்த ஆபாச வீடியோவை இணையத்தில் பரப்பி, ஊர் முழுவதும் வெளிச்சம் போட்டுக் காட்டி விடுவோம்” என்று, மீண்டும் அந்த சிறுமியை மிரட்டி உள்ளனர். ஆனாலும், என்னைப் போல், வேறு எந்த பெண்ணும் பாதிக்கப்படக் கூடாது என்று உறுதியாக இருந்த அந்த சிறுமி, கடைசி வரை தன்னுடைய தோழிகள் யாரையும், அந்த காம பிசாசுகளுக்கு அறிமுகம் செய்து வைக்காமலே இருந்து விட்டார்.

இதனால், காம வெறியின் உச்சத்தில் இருந்த அந்த 3 சிறுவர்களும், அவர்கள் ஏற்கனவே சொன்னது போலவே, 4 மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமியை கூட்டாகச் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த காட்சிகளை, இணையத்தில் பரப்பியதோடு, அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்களிடம் காட்டி, அந்த சிறுமியின் மானத்தைக் காற்றில் பறக்க விட்டு உள்ளனர். இது குறித்த தகவல் அந்த சிறுமிக்கு கிடைத்து உள்ளது.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, அங்குள்ள காவல் நிலையத்தில், தன்னை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பிய 3 சிறுவர்கள் மீதும் புகார் அளித்தார்.

குறிப்பாக, “என்னை இந்த நிலைமைக்கு உள்ளாக்கியவர்கள் உயர் சாதி இந்துக்கள் என்பதால், எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும்” அந்த சிறுமி தனது புகாரில் குறிப்பிட்டு உள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சிறுமி பாலியல் பலாத்காரம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், குற்றச்சாட்டிற்கு உள்ளான 3 சிறுவர்களும், தற்போது தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.