பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க தெரிவித்துள்ளது. 

பீகாரில் 243 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு வருகிற 28-ந் தேதி 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன. இந்நிலையில் பீகார் சட்டசபை தேர்தலுக்கான பா.ஜனதாவின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் பாட்னாவில் இன்று வெளியிட்டார். 
வெளியிடப்பட்டிள்ள தேர்தல் அறிக்கையில்,   

19 லட்சம் வேலை வாய்ப்புகள்

3 லட்சம் புதிய ஆசிரியர்கள் நியமனங்கள்

1 0 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க பீகாரை ஒரு தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்வது

ஒரு கோடி பெண்களை தன்னம்பிக்கை கொள்ளச் செய்வது

சுகாதாரத் துறையில் ஒரு லட்சம் வேலைகள்

30 லட்சம் பேருக்கு புக்கா வீடுகள்

ஒன்பதாம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் இலவச மொபைல் டேப் என கூறப்பட்டு உள்ளது.

மேலும் இதுகுறித்து பேசிய மத்திய நிதி-அமைச்சர் நிர்மலா சீதாராமன், “பீகாரில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது என்டிஏ ஆட்சியின் கீழ் உயர்வைக் கண்டுள்ளது, இது கடந்த 15 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் 3% முதல் 11.3% வரை வளர்ந்துள்ளது, இது சாத்தியமானது, ஏனென்றால் எங்கள் அரசு மக்களுக்கான நல்லாட்சிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. பீகாரில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் இலவச தடுப்பூசி கிடைக்கும். எங்கள் வாக்கெடுப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் வாக்குறுதி இதுவாகும்: 

என்.டி.ஏ-க்கு வாக்களித்து அதை வெற்றிபெறச் செய்யுமாறு மாநில மக்கள் அனைவரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். நிதீஷ் குமார் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பீகார் முதலமைச்சராக இருப்பார். அவரது ஆட்சியின் கீழ், பீகார் இந்தியாவின் ஒரு முற்போக்கான மற்றும் வளர்ந்த மாநிலமாக மாறும்.

பீகார் மாநிலத்தில் அனைத்து குடிமக்களும் அரசியல் ரீதியாக உணர்திறன் கொண்டவர்கள். ஒரு கட்சி அளிக்கும் வாக்குறுதிகளை அவர்கள் நன்கு அறிவார்கள், புரிந்துகொள்கிறார்கள். எங்கள் அறிக்கை குறித்து யாராவது கேள்விகளை எழுப்பினால், நாங்கள் அளித்த வாக்குறுதியளித்ததை நிறைவேற்றும்போது அவர்களுக்கு நம்பிக்கையுடன் நீங்கள் பதிலளிக்கலாம்' என்று கூறியுள்ளார்.