OTT தளத்தில் மூக்குத்தி அம்மன்...ரிலீஸ் தேதி அறிவிப்பு !
By Aravind Selvam | Galatta | October 23, 2020 18:13 PM IST
பிரபல Radio தொகுப்பாளராக இருந்து ,சினிமாவில் காமெடியனாக மாறி LKG படத்தின் மூலம் ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் RJ பாலாஜி.இவர் ஹீரோவாக நடித்த LKG திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.
இதனை தொடர்ந்து RJ பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்தையும் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.இந்த படத்தின் மூலம் RJ பாலாஜி இயக்குனராக அறிமுகமாகிறார்.RJ பாலாஜியுடன் இணைந்து NJ சரவணனும் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்திற்கு மூக்குத்தி அம்மன் என்று பெயரிட்டுள்ளனர்.நயன்தாரா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது மூக்குத்தி அம்மன் படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த தீபாவளிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த படம் தீபாவளி அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் ட்ரைலரை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சென்னை பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் வெளியிடப்போவதாக RJ பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்த வருஷம் தீபாவளிக்கு மூக்குத்தி அம்மன் வருகிறாள்..! 🙏#MookuthiAmman #DiwaliRelease on Disney Plus Hotstar Vip..! ❤️ pic.twitter.com/Vefv0NPhHl
— RJ Balaji (@RJ_Balaji) October 23, 2020
Suriya's Soorarai Pottru New Video Song | GV Prakash | Aagasam
23/10/2020 05:25 PM
K. G. F: Chapter 1 re-release plans - official announcement!
23/10/2020 04:05 PM
Goundamani's health condition rumours clarification - official statement here!
23/10/2020 04:05 PM
Nayanthara's Mookuthi Amman goes for a direct OTT release | Grand Diwali release
23/10/2020 04:00 PM