புதுச்சேரி ஆளுநர் மற்றும் முதல்வருக்கும் இடையில் அவ்வப்போது முரண்பாடுகள் ஏற்பட்டு வரும். ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து பலமுறை புதுச்சேரி முதல்வர் போராட்டம் நடத்தி உள்ளார். இந்த முறை ஆளுநர் கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.


முதல்வர் நாராயணசாமியுடன் காங்கிரஸ் தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  மக்கள் நலத்திட்டங்களுக்கும் , மாநில வளர்ச்சிக்கும் தடையாக கிரண்பேடி இருப்பதாகவும். அவரை பிரதமர் மோடி திரும்ப பெற வேண்டும் என அமைதி வழியில் போராட்டம் நடத்துகிறார்கள். இந்த போராட்டத்துக்கு துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.