ஒரே நேரத்தில் 2 பெண்களை காதலித்து வந்த இளைஞனை, எந்த பெண் திருமணம் செய்து கொள்வது என்று பஞ்சாயத்து வரை சென்றதால், டாஸ் போட்டு முடிவு செய்து, அதில் ஒரு இளம் பெண்ணுக்குத் திருமணம் நடத்தி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு முக்கோண காதல் கதை அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் சக்லேஷ்பூர் தாலுகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஒரே நேரத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த 2 பெண்களை காதலித்து வந்திருக்கிறார்.

அந்த இளைஞன், ஒரு பெண்ணை காதலிப்பது, மற்றொரு பெண்ணுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்ட நிலையில், காதலனின் இந்த தில்லாலங்க வேலையானது அதில் ஒரு காதலிக்கு மட்டும் தெரிய வந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, காதலிகள் இருவருக்கும் இந்த விசயம் தெரிய வந்துள்ளது. அந்த காதலனின் துரோகச் செயல் தெரிந்த போதிலும், அந்த இளைஞனையே கல்யாணம் செய்ய 2 இளம் பெண்களும் ஒரே நேரத்தில் போட்டி போட்டு உள்ளனர். 

இந்த விவகாரம், இரு இளம் பெண்களின் வீடு மற்றும் அந்த இளைஞனின் வீட்டார் என 3 பேரின் வீட்டாருக்கு தெரிந்த நிலையில், யாரை, யாருக்கு திருமணம் செய்து வைப்பது என்று பேசி பார்த்தனர். ஆனால், இரு பெண்களும் அந்த இளைஞனை விட்டுக்கொடுக்கவில்லை.

இதனால், இந்த விவகாரம் வேறுவழியில்லாமல் அந்த ஊர் பஞ்சாயத்து வரை சென்றிருக்கிறது.

இந்த விவகாரத்துக்குச் சம்பந்தப்பட்ட 3 குடும்பத்தினர்கள், உள்ளூர் வாசிகள் ஆகியோர் சேர்ந்து பேசிய நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை ஒரு நாணயத்தில் “டாஸ் போட்டு” பார்த்து அந்த இளைஞரை எந்த பெண் திருமணம் செய்துகொள்வது என்று முடிவு செய்யப்படும் என்று பேசி உள்ளனர். இதற்கு, போட்டிப்போட்ட இரு பெண்களும் சம்மதம் தெரிவித்தனர்.

அதே நேரத்தில், தோற்றுப்போகும் பெண், காவல் நிலையத்தில் புகார் அளிக்கக்கூடாது என்றும், பஞ்சாயத்தார் இரு பெண் வீட்டார் தரப்பிலும் பேசிக்கொண்டனர்.

இதனையடுத்து, ஏமாற்றப்பட்ட இரு பெண்களுள் ஒருவர், டாஷ் போடும் முன்னரே இளைஞரைத் திருமணம் செய்து வைக்கக்கோரி விஷ மருந்தி உள்ளார். 

அதன் பின்னர் விசமருந்திய பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துக் கொண்டார். இதனால், பயந்துபோன இளைஞர், விசமருந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 

ஒரு வழியாக இளைஞரின் முக்கோண காதல் கதைக்குத் திருமணம் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதைக் கண்ட உள்ளூர் வாசிகள் நிம்மதிப் பெரு மூச்சு விட்டனர்.

இதனால், மற்றொரு இளம் பெண், அந்த இளைஞனின் கண்ணத்தில் ஒரே ஒரு பளார் விட்டு, அந்த பெண்ணை கட்டியணைத்து வாழ்த்தவிட்டுச் சென்றார். இதனையடுத்து, அந்த காதலனுக்கு, மற்றொரு காதலியுடன் திருமணம் நடைபெற்றது.