தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் இந்த மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் வெளிவர உள்ளது. 

முன்னதாக மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் லாபம் திரைப்படம் வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையடுத்து ,விஜய் சேதுபதியும் நடிகை டாப்ஸியும் இணைந்து நடித்திருக்கும் அனபெல் சேதுபதி திரைப்படம் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. 

அடுத்ததாக விஜய் சேதுபதியின் அரசியல்  திரைப்படமாக வெளிவருகிறது துக்ளக் தர்பார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிகர்கள் பார்த்திபன் , சத்தியராஜ் & கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, கதாநாயகிளாக  ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், காயத்ரி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்

இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் செவன் க்ரீன் ஸ்டூடியோ சார்பில் தயாரிப்பாளர் S.S. லலித் குமார் தயாரிப்பில், தயாராகும் துக்ளக் தர்பார் திரைப்படத்திற்கு பிரபல இயக்குனர் பாலாஜி தரணிதரன் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 

துக்ளக் தர்பார் திரைப்படம் வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் நேரடியாக வெளியாகிறது. தொடர்ந்து நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் செப்டம்பர் 11 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் துக்ளக் தர்பார் படத்தின் புதிய ரிலீஸ் ப்ரோமோ வீடியோ வெளியானது. அசத்தலான அந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.