தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தை  Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியானது.இந்த படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.திரையரங்குகளில் கொரோனாவிற்கு பிறகு வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தியது மாஸ்டர்.

இந்த படத்தின் பாடல்கள் பெரிய ஹிட் அடித்திருந்தன,இந்த படத்தின் பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலமாக உள்ளது என்று ரசிகர்கள் பாராட்டி வந்தனர்.இந்த படத்தின் பின்னணி இசை அடங்கிய OST வீடியோ வெளியிடப்பட்டு பெரிய வரவேற்பை பெற்று வந்தது

தற்போது இந்த OST வீடியோ 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இந்தியாவில் அதிகம் கேட்கப்பட்ட OST வீடியோ என்ற பெருமையை பெற்றுள்ளது,இரண்டாவது இடத்தில கேஜிஎப் முதல் பாகத்தின் OST மற்றும் மூன்றாவது இடத்தில் கத்தி படங்கள் உள்ளன.