இந்திய திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான அக்ஷய்குமார் பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். கடைசியாக தமிழில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 2.O  படத்தில் பக்ஷிராஜன் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் - நடிகர் லாரன்ஸின் இயக்கத்தில் வெளிவந்து தமிழில் மெகா ஹிட்டான காஞ்சனா திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்காக தயாரான லக்ஷ்மி படத்திலும் நடித்திருந்தார் அக்ஷய் குமார். இதைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு அக்ஷய் குமார் நடித்த ஸ்பை த்ரில்லர் திரைப்படமான பெல்பாட்டம் 3டியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் அக்ஷய் குமார் அவர்களின் தாயார் அருணா பாட்டியா இன்று உயிரிழந்தார். நடிகர் அக்ஷய் குமாரின் தாயார் மறைவுக்கு இந்திய திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில்,

எனக்கு எல்லாமே என் தாய் தான்... இன்று என்னால் தாங்க முடியாத வலியை உணர்கிறேன்... எனது தாயார் திருமதி.அருணா பாட்டியா இன்று காலை இயற்கை எய்தினார்... தொடர்ந்து மேலுலகத்தில் என் தந்தையுடன் இணைந்து இருப்பார்... உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்!!

என மிகுந்த வருத்தத்தோடு பதிவிட்டுள்ளார்.