பட்டப்பகலில் 8 மாத கர்ப்பிணியை சாலையில் தரதரவென இழுத்துச் சென்று 11 சவரன் தாலி ஜெயினை வழிப்பறி திருடன் ஒருவன் பறிக்க முயன்ற சம்பவம், நெஞ்சைப் பதறவைத்து உள்ளது.

சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி, அது தொடர்பான பதறவைக்கும் CCTV காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

சென்னை பல்லாவரம் ரேணுகா நகரைச் சேர்ந்த கீதா, தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இவர், தனது வீட்டு வாசலில் உள்ள பிள்ளையார் கோயிலில், சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்தார். 

அப்போது, அங்கு 2 இருசக்கர வாகனத்தில் 3 மர்ம நபர்கள் வந்து உள்ளனர். அந்த 3 பேரில், ஒருவன் மட்டும் இருசக்கர வாகனத்தை விட்டு கீழே இறங்கி 

நடந்து வந்து உள்ளார். அப்போது, தனது வீட்டு வாசில் உள்ள பிள்ளையார் கோயிலில் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்த 8 மாத கர்ப்பிணியான கீதாவின் அருகில் வந்த ஒரு நபர், அவர் கழுத்தில் அணிந்திருந்த 11 சவரன் தாலி ஜெயினை அறுக்க முயன்று உள்ளார். இதனால், பதறிப்போன கீதா, தனது தாலியை காப்பாற்றும் முயற்சியில், அவனிடம் போராடி உள்ளார். 

இதனையடுத்து, அந்த பெண் கர்ப்பிணி என்று பார்க்காத இறக்கமற்ற அந்த திருடன், அந்த கர்ப்பிணியை சாலையில் கீழே தற்றி, அவர் கழுத்தில் இருந்த தாலி ஜெயினை பறிப்பதிலேயே குறியாக இருந்து உள்ளார். ஆனாலும், அந்த பெண் கீதாவும் தாலியை ஜெயினை விடுவதாக இல்லை.

இதனால், கடும் கோபம் அடைந்த அந்த திருடன், 8 மாத கர்ப்பிணியான அந்த பெண்ணை, பட்டப்பகலில் சாலையில் தரதரவென இழுத்துச் சென்று அந்த தாலி செயினை பறிக்க முயன்றான். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர், அருகில் வடியை நிறுத்திவிட்டு, அதனை தட்டி கேட்காமல், இந்த காட்சியை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்.

அத்துடன், இந்த காட்சியை சுமார் 100, 200 அடி தூரத்தில் நின்று கவனித்த மற்றொரு இளைஞன், அருகில் செல்ல முற்பட்டு, தயங்கியே நின்று விட்டார்.

இப்படியாக, பட்டப்பகலில் சாலையில் தரதரவென இழுத்துச் சென்று அந்த தாலி செயினை பறிக்க முயன்ற இந்த போராட்டம் சில நிமிடங்கள் வரை நீடித்து உள்ளது. நேரம் ஆகிக்கொண்டு இருந்ததாலும், அந்த கர்ப்பிணி பெண் விடப்பிடியாக இருந்ததாலும், இனியும் இங்கு ஜெயினை பறிக்க முயன்றால், நாம் பொது மக்களிடம் மாட்டிக்கொள்வோம் என்று முடிவு செய்த, அந்த திருடன், அங்கிரு ஓட்டம் பிடித்து, அவன் வந்த இருசக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பித்துச் சென்றான்.

வழிப்பறி திருடன் சென்ற அடுத்த நிமிடமே, சாலையில் விழுந்து கிடந்த கர்ப்பிணிப் பெண், சட்டென்று எழுந்து, அருகில் இருந்த மல்லிகை கடையின் நின்றிருந்தவர்களிடம் உதவி கேட்டு உள்ளார். அவர்களும், அந்த திருடனை நோக்கி கம்பீரமாக நடந்து வருகிறார்கள். இப்படியாக, முடியும் பதறவைக்கும் CCTV காட்சிகள் தற்போது வெளியாகி அனைவரையும் கடும் அதிர்ச்சியடைய வைத்து உள்ளது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த பெண், அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தான் அணிந்திருந்த தாலி ஜெயின் 11 சவரன் என்றும், தனக்கு நேர்ந்த வழிப்பறி முயற்சி குறித்து, அந்த பெண் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் இருந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்து, அதன் படி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த பதறவைக்கும் CCTV காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  வைரலாகி வருகிறது. இதனால், அப்பகுதி பொது மக்கள் பீதியடைந்து உள்ளனர்.