நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்துகொண்டு குடி போதையில் இருந்த வட மாநில இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு முருகேஷ் பாளையாவில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இப்படியான சூழலில், நேற்று முன் தினம் இரவு எச்.எஸ்.ஆர். லே அவுட்டில் வசிக்கும் தனது நண்பர்களின் வீட்டுக்கு அந்த இளம் பெண் சென்றிருக்கிறார். 

அப்போது, அந்த நண்பரின் வீட்டில் இரவு நேரத்தில் விருந்து நிகழ்ச்சி நடந்து உள்ளது. அந்த விருந்தில் கலந்துகொண்ட அந்த வட மாநில இளம் பெண் பங்கேற்று உள்ளார். 

நள்ளிரவு முதல் நண்பர்களுடன் சேர்ந்து அந்த இளம் பெண் மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அந்த இளம் பெண் அதிகாலை 3 மணி அளவில் எச்.எஸ்.ஆர். லேஅவுட்டுக்கு வாடகை காரில் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

காரில் செல்லும் போது அந்த இளம் பெண் நல்ல குடி போதையில் இருந்ததால், அவரால் அந்த காரின் கதவை கூட திறக்க முடியாமல் சிரமப்படுவதை அந்த கார் டிரைவர் கவனித்து உள்ளார்.

இதனையடுத்து, அந்த பெண்ணை தனது காரில் ஏற்றுக்கொண்டு சென்ற அந்த டிரைவர், அந்த கார் அங்குள்ள முருகேஷ் பாளையாவுக்கு சென்ற போதும், காரில் இருந்து இறங்க முடியாமல் இளம் பெண் மிகவும் சிரமப்பட்டு உள்ளார். 

அப்போது, நல்ல குடிபோதையில் இருந்த அந்த இளம் பெண்ணை, முருகேஷ் பாளையாவில் இருந்து ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்ற அந்த கார் டிரைவர், அந்த இளம் பெண்ணை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

இதனையடுத்து, அந்த பெண்ணை அப்படியே அங்கேயே விடாமல், அந்த இளம் பெண்ணின் வீட்டில் விட்டு விட்டு அந்த கார் டிரைவர் அங்கிருந்து சென்றிருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, காலையில் போதை தெளிந்து எழுந்த அந்த பெண், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது நினைவுக்கு வந்து, கடும்  அதிர்ச்சியடைந்து உள்ளார்.

இது குறித்து உடனடியாக அங்குள்ள ஜீவன் பீமா நகர் காவல் நிலையத்தில் அந்த இளம் பெண் புகார் அளித்தார். 

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில், சம்மந்தப்பட்ட கார் டிரைவரான தேவராஜை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில், அந்த இளம் பெண்ணும் அங்குள்ள பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.