தமிழ் சினிமாவின்  "தல" அஜித் குமார் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் வலிமை. நீண்ட நாட்களாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வலிமை திரைப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும்  தயாரிப்பாளர் போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

சதுரங்கவேட்டை & தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய H.வினோத் இயக்கத்தில்  உருவாகியுள்ளது வலிமை. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா ஒளிப்பதிவில் தயாராகும் வலிமை திரைப்படத்தில் அஜீத் குமாருடன் இணைந்து நடிகை ஹூமா குரேஷி, கார்த்திகேயா , யோகி பாபு மற்றும் விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.அதிரடி திரைப்படமான வலிமை படத்தில் திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில் வெளியான வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் நாங்க வேற மாதிரி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வலிமை திரைப்படம் 2022-ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தல அஜித் குமாரின் வலிமை படத்தின் முக்கிய தகவல் இன்று வெளியானது.

இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் குமார் அதிரடி காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் வலிமை படத்தின்  வெறித்தனமான ப்ரோமோ டீசர் வீடியோ இன்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக வெளியானது. மிரட்டலான அந்த புரோமோ டீசர் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.