மலையாளத் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் டொவினோ தாமஸ் மலையாள திரையுலகம் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்தவர். நடிகர் தனுஷ் நடித்த மாரி 2 திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய டெவினோ தாமஸ் அடுத்ததாக சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் சூப்பர் ஹீரோ திரைப்படமாக தயாராகியிருக்கும் மின்னல் முரளி திரைப்படத்தில் மின்னல் முரளி எனும் சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் டொவினோ தாமஸ். இப்படத்தை இயக்குனர் பாசில் ஜோசப் இயக்கியுள்ளார். வீக் என்ட் ப்ளாக்பஸ்டர்ஸ் நிறுவனம் தயாரிக்க, நடிகர்கள் குரு சோமசுந்தரம், அஜு வர்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

சமீர் தாஹிர் ஒளிப்பதிவில் ஷான் ரஹ்மான் மற்றும் சுஷில் ஷ்யாம் இணைந்து இசையமைத்துள்ளனர். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாகும் மின்னல் முரளி திரைப்படம் நேரடியாக நெடஃபிலிக்ஸ் OTT தளத்தில் ரிலீஸாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மின்னல் முரளி படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியானது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விருந்தாக வருகிற டிசம்பர் 24ஆம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் மின்னல் முரளி திரைப்படம் நேரடியாக வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.இதனை அறிவிக்கும் வகையில் புதிய ப்ரோமோ டீசர் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.