“காதலியை கல்யாணம் செய்து கொடுக்க மறுத்த அவரது தாயாரின் படத்தை ஆபாசமாக சித்தரித்து, காதலன் ஒருவன் சமூக ஊடகத்தில் வெளியிட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் 17 வயது மைனர் பெண் ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த பெண், அங்குள்ள பள்ளியில் படிப்பை முடித்துவிட்டு, கல்லூரியில் இந்த ஆண்டு சேருவதற்கு ஆயத்தாமாகி வந்தார்.

அதே நேரத்தில், இந்த மைனர் பெண், தனது செல்போன் மூலமாக சமூக வலைத்தளத்தில் எந்நேரமும் மூழ்கிக் கிடந்து உள்ளார். 

இந்த நிலையில் தான், அந்த மைனர் பெண்ணுக்கு, அங்குள்ள கலபுரகியை சேர்ந்த 25 வயது இளைஞருடன் சமூக வலைத்தளம் மூலமாக அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. 

இதனால், அவர்கள் இருவரும் சமூக ஊடகம் மூலமாக சாட்டிங் செய்து வந்து உள்ளனர். இப்படியே நில நாட்கள் அவர்கள் சாட்டிங் மூலமாக இன்னும் நெருக்கமான நிலையில், ஒரு கட்டத்தில், அந்த பெண்ணின் தாயிடமும் அந்த இளைஞர் பேசி வந்தார் என்றும் கூறப்படுகிறது.

அந்த நேரத்தில், அந்த இளம் பெண்ணும், அவரது தாயாரும் அந்த இளைஞனிடம் கேட்டுக் கொண்டதன் பேரில், தங்களது புகைப்படங்களை அவருக்கு அனுப்பி வைத்து இருக்கிறார். 

இந்த நிலையில் தான், அந்த இளைஞர் அந்த இளம் பெண்ணை திடீரென்று ஒரு தலையாக காதலிக்க ஆரம்பித்திருக்கிறார். 

ஒரு கட்டத்தில், அந்த இளம் பெண்ணின் தாயாரிடம், “உங்களது மகளை எனக்குத் திருமணம் செய்து தாருங்கள்” என்று, அவர் கேட்டிருக்கிறார். 

இதனைக் கேட்டு சற்று அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் தாயார், “என் மகளுக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை உள்ளிட்ட பல காரணங்களைக் கூறி, திருமணம் செய்து கொடுக்க” அவர், மறுத்து விட்டார் என்று கூறப்படுகிறது.

இதனால், கடும் கோபம் அடைந்த அந்த இளைஞர், தனது ஒரு தலை காதலியின் தாயாரின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து, அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

இதனைப் பார்த்த பலரும், கடும் அதிர்ச்சியாகி, இந்த போட்டோவை சம்மந்தப்பட்ட பெண்ணின் கவனத்திற்குக் கொண்டு சென்று உள்ளனர். 

இதனால் அந்த பெண்ணும், அவரின் தாயாரும் அந்த போட்டோவை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்து சம்மந்தப்பட்ட அந்த இளைஞரை அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.