டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா மரணத்தைப் போல், மும்பையிலும் அதே போன்று ஒரு கொடூரமான பாலியல் பலாத்கார கொலை சம்பவம் நடந்து நாட்டையே 
உலுக்கி உள்ளது.

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு இளம் பெண் நிர்பயா, ஒரு கும்பலால் ஓடும் பேருந்தில் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். 

அந்த பெண்ணை பலாத்காரம் செய்த வெறிபிடித்த அந்த மிருகங்கள், அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து மிக கொடூரமான முறையில் சித்ரவதை, பேருந்திலிருந்து இறக்கமே இல்லாமல் தூக்கி வீசி சென்றது. 

பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளம் பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அதன் தாக்கமாகப் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் நினைவாகப் பெண்களுக்கான பல்வேறு பாதுகாப்பு திட்டங்களை மத்திய - மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

தற்போது, 9 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா மரணத்தைப் போல், மீண்டும் ஒரு கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவம் தற்போது  மகாராஷ்டிராவில் அரங்கேறி உள்ளது நாட்டை உலுக்கி உள்ளது.

அதாவது, மும்பையின் புறநகர் பகுதியான சகிநாகாவில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த வேன் ஒன்றில், நேற்று முன் தினம் இரவு 34 வயதுடைய பெண் ஒருவர், மிகவும் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகவும், அந்த பெண்ணை ஒருவர் தாக்கிக்கொண்டு இருக்கிறார்” என்ற தகவல் அந்த பகுதி போலீசாருக்கு கிடைத்து உள்ளது.

இதனால், பதறிப்போன போலீசார், உடனடியாக அங்கு விரைந்து சென்று பார்த்த போது, அந்த இளம் பெண் ரத்த வெள்ளத்தில் அங்கு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். 

அந்த பெண்ணை பார்ப்பதற்கே பதறிப்போன போலீசார், உடனடியாக அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அப்போது, பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் “பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து மிக கடுமையாகச் சிதைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்து” போலீசாரிடம் கூறியிருக்கிறார்கள்.

அத்துடன், பாதிக்கப்பட்ட அந்த பெண் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், அவரது நிலைமை மிகப் பெரிய அளவில் கவலைக்கிடமாக இருப்பதாகவும்” மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எனினும், பாதிக்கப்பட்டு பெண்ணிற்குத் தீவிரமான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த பெண் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்து உள்ளார்.

இந்த பயங்கர கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த குற்றத்தைச் செய்த குற்றவாளியை போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விரைந்து தேடினர். தீவிரமாக நடத்தப்பட்ட விசாரணையில், இந்த உச்சக்கட்ட வெறித்தனத்தில் ஈடுபட்ட 45 வயதான மோகன் சவுகான் என்பவரை அடுத்த சில மணி நேரங்களிலேயே போலீசார் கண்டுபிடித்து, அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

“மோகன் சவுகான் மீது பலாத்காரம், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில்” போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

மேலும், “இந்த பாலியல் பலாத்காரத்தில் இவர் மட்டுமே ஈடுபட்டாரா? அல்லது வேறு நபர்களும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா?” என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

மும்மையில் நடைபெற்ற இந்த கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவம் மகாராஷ்டிராவில் மட்டுமில்லாது நாடும் முழுவதும் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.