மகளை தாயாரின் 2 வது கணவன் பாலியல் பலாத்காரம் செய்த தகவல் தெரிந்தும், கணவனை காப்பாற்ற அந்த தாயார் முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது.

மகராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த அமுதாவிற்கு (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) கடந்த 1998 ஆம் ஆண்டு, திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணத்திற்குப் பிறகு, இவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்த உள்ளது. அமுதா தம்பதியினர் தங்களது மகளை நன்றாக வளர்த்து வந்தனர்.

இப்படியான சூழ்நிலையில், கடந்த 2000 ஆம் ஆண்டில் சிறுமிக்கு 2 வயது இருக்கும் போது, அவரது தந்தை இறந்து விட்டார். இதன் காரணமாக, அமுதா தினமும் வீட்டு வேலை பார்த்து வந்து, தனது மகளை வளர்த்து வந்தார். 

அதன் தொடர்ச்சியாக, மகராஷ்டிராவின் தானே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவரை கடந்த 2010 ஆம் ஆண்டில் அமுதா மறுமணம் செய்து கொண்டார். இதனால், அமுதாவின் மகள், அவரது தாத்தா வீட்டில் தங்கி வளர்ந்து வந்தாள்.

இதனையடுத்து, 2012 ஆம் அமுதாவிற்கு ஒரு மகன் பிறந்தான். இதனையடுத்து, தாத்தா வீட்டில் வளர்ந்து வந்த சிறுமி தாயார் மற்றும் தாயாரின் 2 வது கணவருடன், அவர்களது வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்.

சிறுமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 7 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது, அவருடைய தாயார் அமுதா, வேலைக்கு சென்ற பிறகு சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்திருக்கிறார். அப்போது, தாயாரின் 2 வது கணவன் தனது வளர்ப்பு மகள் என்றும் பார்க்காமல், அவர் 7 ஆம் வகுப்ப படிக்கும் சிறுமி என்றும் பார்க்காமல், அந்த சிறுமி மீது சபலப்பட்டு, அவரை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

அத்துடன், “இது தொடர்பாக யாரிடமும் எதுவும் கூற கூடாது என்றும், அப்படி கூறினால் உன்னையும் உன் தாயாரையும் கொன்று விடுவேன்” என்றும், மிரட்டியே அந்த சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். இதனால், பயந்து போன அந்த சிறுமி யாரிடமும் எதுவும் கூறாமல், அந்த கொடுமைகளை எல்லாம் தாங்கிக்கொண்டு வந்திருக்கிறார்.

இப்படியாக அந்த சிறுமியை அவரது வளர்ப்புத் தந்தை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.

இதனால், அந்த சிறுமி ஒரு கட்டத்தில் கர்ப்பம் அடைந்து உள்ளார். மகள் கர்ப்பமாக இருப்பது தெரிந்து கடும் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் சிறுமியிடம் சரிவர விசாரிக்காமல், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மறுபுறம் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்து, சிறுமியின் கருவை கலைத்து உள்ளனர். 

இதனையடுத்து, இந்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக சிறுமியிடம் விசாரித்த போது, அந்த சிறுமி யாருக்கோ பயந்து  உண்மையைச் சொல்லாமல், “என்னை ரிக்‌ஷா தொழிலாளி ஒருவரும், தன்னுடன் படிக்கும் ஒருவரும் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக” மாறி மாறி கூறி சமாளித்து இருக்கிறார்.

இதனால், சந்தேகம் அடைந்த போலீசார், சிறுமியின் ரத்த மாதிரிகள் மற்றும் அவருடைய உடலில் இருந்து கரு செல்கள் ஆகியவற்றை டி.என்.ஏ பரிசோதனைக்காக சேகரித்தனர்.

அதன் தொடர்ச்சியாகவே கடந்த 2014 ஆம் ஆண்டு, ஏப்ரல் 26 ஆம் தேதி என்னை எனது தயாரின் 2 வது கணவர் தான் பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற உண்மையை போலீசாரிடம் கூறியிருக்கிறார்.

மேலும், “எனது தாய், அவரது கணவரின் தயவில் தான் வாழ்ந்து வருகிறார். அதனால் தான், இந்த உண்மையை இத்தனை நாட்களாக நான் மறைத்து வந்தேன்” என்றும், அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

குறிப்பாக, காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு, தனது மகளை தனது கணவர் தான் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் என்கிற உண்மை, சிறுமியின் தாயார் அமுதாவிற்கு முன்பே தெரிந்திருந்த நிலையில், தனது வாழ்க்கை பறிபோய் விடுமே என்ற பயத்தின் காரணமாக, இதனை அவர் போலீசாரிடம் கூறாமல் தொடர்ந்து நாடகம் ஆடி வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, அங்குள்ள அரசு பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார். அத்துடன், சிறுமியின் டின்.என்.ஏ அறிக்கையின் மூலமாக, அவருடைய வளர்ப்புத் தந்தை தான் இந்த பலாத்கார செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இது தொடரபான வழக்கு நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி சந்தீப் ஷிண்டே, சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து அதிரடியாக உத்தரவிட்டார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.