“இந்திய மத்தியதர வர்க்கத்தினரிடம் நிறைய பணம் இருக்கிறது, பொருட்களை வாங்கும் திறன் இருக்கிறது” என்று, அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமன் உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளது பெரும் பேசும் பொருளாக மாறி உள்ளது.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்று உள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது,
கலந்துரையாடிய அவர், “இந்திய மத்திய தர வர்க்கத்தினரிடம் நிறைய பணம் இருக்கிறது என்றும், நினைக்கும் பொருட்களை வாங்கும் திறன் அவர்களிடம்
இருக்கிறது” என்றும், பேசி உள்ளார்.

அதாவது, அமெரிக்காவில் உள்ள மொசாவர் ரஹ்மானி மையத்தால் நடந்த நிகழ்ச்சியில், ஹார்வர்டு பல்கலை பேராசிரியர் லாரன்ஸ் சம்மர்ஸ் உடன்
உரையாடினார். இதனை அமெரிக்க ஊடகங்கள் நேரலையில் ஒளிப்பரப்பு செய்தது. 

அப்போது பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்தியா, சிறந்த திறன் கொண்ட நாடாக இருக்கிறது என்றும், இந்தியா தான் உலகிலேயே அதிக
வளர்ச்சி கொண்ட நாடாக இருக்கும்” என்றும், கூறினார்.

அத்துடன், “அடுத்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீத்திலிருந்து 8.5 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும், இது அடுத்தடுத்த
ஆண்டுகளில் இன்னும் வளர்ச்சியடையும் என்றும்” அவர் தெரிவித்தார்.

“நடப்பு ஆண்டில் இரட்டை இலக்கத்துக்கு நெருக்கமான வளர்ச்சியை அடையும் என்றும்; நிதியமைச்சகம், வளர்ச்சி குறித்த எந்த கணிப்பையும் இது வரை
மேற்கொள்ளவில்லை என்றாலும், உலக வங்கி, பன்னாட்டு நிதியம் மற்றும் மதிப்பீட்டு அமைப்புகள் அனைத்துமே, நான் குறிப்பிட்ட இந்த வளர்ச்சி வீதத்தை தான்
தெரிவிக்கின்றன” என்றும், அவர் மேற்கொள் காட்டினார்.

குறிப்பாக, “சிறந்த வாங்கும் திறன் கொண்ட நாடாக இந்தியா தற்போது இருக்கிறது என்றும், நாட்டின் மத்திய தர வர்க்கத்தினரிடம் பொருட்களை வாங்குவதற்கான
பணம் இருக்கிறது என்றும், இன்னும் பிற இடங்களிலிருந்து வரும் மக்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், உற்பத்தி செய்வதற்கும் ஏற்ற சந்தை இருக்கிறது”
என்றும், நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்.

“ஆனால், கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான Pew ரிசர்ச் செண்டரின் ஆய்வின் படி கொரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியாவின் மத்திய தர வர்க்கத்தினரை 32
மில்லியனாக சுருக்கி விட்டது என்றும், 75 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே சென்று விட்டனர் என்கிறது” என்றும், குறிப்பிட்டார்.

மிக முக்கியமாக, “இந்திய மக்கள் தொகையை 5 ஆக வகைப்பிரிக்கின்றனர் என்றும், அதன் படி ஏழைகள், குறைந்த வருவாய், நடுத்தர வருவாய், மேல் நடுத்தர
வருவாய், உயர் வருவாய் பிரிவாக பிரித்ததில், ஏழைகள் நாளொன்றுக்கு 2 டாலர்களுக்கும் குறைவான வருவாயில் வாழ்வாதாரத்தைப் பராமரித்து வருகின்றனர்
என்றும், நடுத்தர வர்க்கம் 10 - 20 டாலர்கள் வரை தினசரி வருவாய் என்ற ரீதியில் ஈட்டுகின்றன என்கிறது” என்ற ஆய்வையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதே போல், “ஒரு டாலர் 80 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் கூட, 10 டாலர் என்பது 800 ரூபாய் என்றும், தினசரி 800-1000 ரூபாய் என்றால், மாதம் 30,000 இதில்
நகரங்களில் வீட்டு வாடகையே 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை இருக்கிகறது என்றும், இவற்றுடன் கரண்ட் பில், குழந்தைகள் கல்விச் செலவு, சுகாதாரச் செலவு,
தினசரி காய்கனிகள் என்று செலவு இருந்து கொண்டே இருக்கும் என்றும், இதில் வீடு வாசல் என்று வாங்கினால் மாதத் தவணையும் சென்று விட்டால் கையில்
எஞ்சுவது என்ன? என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்” என்றும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டி உள்ளார்.