விஷப் பாம்பை ஏவி மனைவி உத்ராவை கொலை செய்த வழக்கில், கணவர் சூரஜ் குமாருக்கு 2 ஆயுள் தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கொல்லம்  நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கி உள்ளது.

கேரள மாநிலம் அடூரை சேர்ந்தவர் 27 வயதான சூரஜ், தனியார் வங்கியில் பணி புரிந்து வந்த நிலையில், சூரஜ்க்கு கடந்த கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, அந்த பகுதியைச் சேர்ந்த 22 வயதான உத்ரா என்ற இளம் பெண் முறைப்படி திருமணம் செய்துள்ளார்.

இவர்களது திருமணத்தின் போது, உத்ராவின் பெற்றோர்  100 பவுன் தங்க நகைகள், மற்றும் ஒரு கார் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக வழங்கி இருக்கிறார்கள். ஆனால், தனது மனைவி மீது ஈர்ப்பு இல்லாத கணவனட சூரஜ் 2 வது திருமணம் செய்து கொள்ள விரும்பியதாக தெரிகிறது. இதனால், கணவன் - மனைவிக்கு இடையே அப்போது அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருக்கிறது.

அந்த நேரத்தில் தான் கடந்த மார்ச் 2 ஆம் தேதியன்று, கேரளா அடூரில் இருக்கும் தனது கணவரின் வீட்டிற்கு வெளியே உத்ராவை ஒரு பாம்பு கடித்து உள்ளது. பின்னர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பிறகு வீடு திரும்பிய அவர், தனது அம்மா வீடடில் பெற்றோருடன் ஓய்வு எடுத்து வந்தார். 

அந்த சூழலில்தான், கடந்த மே 7 ஆம் தேதி காலையில், உத்ரா தனது பெற்றோர் வீட்டில் படுக்கையறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். உத்ராவின் தந்தை விஜயசேனன், தாய்  மணிமேகலா ஆகியோர் மகளின் நிலையைப் பார்த்து பதறிப்போய் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில். “உத்ரா விஷ பாம்பு கடித்து ஏற்கனவே இறந்து விட்டதாக” மருத்துவர்கள் கூறி உள்ளனர். 

இதனையடுத்து, தனது மகளை  2 முறை பாம்பு கடித்ததால், அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்தது. இது குறித்து, அவரது பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது குறித்து வழககுப் பதிவு செய்த போலீசார், சூரஜை கைது செய்து விசாரணை நடத்தியபோது, கணவனின் திட்டபடி பாம்பு கடியின் முதல் முயற்சியே தோல்வில் முடிந்து போகவே, பின்னர் 2 வது முயற்சியாக ​​சூரஜ் மற்றொரு விஷ பாம்பை 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி உத்ராவின் வீட்டிற்கு கொண்டு வந்து, அந்த பாம்பை மனைவி மீது வீசி உள்ளார்.  அந்த பாம்பு உத்ராவை 2 முறை கடித்து உள்ளது. இதில் உத்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இந்த விசயம் விசாரணையில் போலீசார் கண்டுப்பிடித்தனர்.

மேலும், இது தொடர்பான வழக்கு கொல்லம் ஆறாம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த குற்றத்தை அரிதான வழக்காக குறிப்பிட்ட நீதிமன்றம், “பாம்பை பயன்படுத்தி மனைவியைக் கொடூரமாக கொலை செய்த வழக்கில், கணவன் குற்றவாளியே” என்று, நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.

அத்துடன், குற்றவாளிக்கான தண்டனை விவரங்களை இன்று அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. அதன் படி, குற்றவாளிக்கான தண்டனை விபரங்களை நீதிமன்றம் தற்போது அறிவித்து உள்ளது.

இந்த குற்ற வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி மனோஜ், “உத்ரா கொல்லப்பட்ட வழக்கில் கணவர் சூரஜ்க்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் குற்றவாளியே” என்று, தீர்ப்பளித்தார். 

குறிப்பாக, “குற்றவாளி சூரஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை” விதித்து தீர்பளிளத்த நீதிபதி மனோஜ், “2 ஆயுள் தண்டனையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு, அவருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதமும்” விதித்து உத்தரவிட்டார்.