கலெக்டர் வீட்டுக்கு திருட வந்த கொள்ளையர்கள் அங்கு எதிர்பார்த்த அளவுக்கு பணம் இல்லாததால், “பணம் இல்லாத வீட்டை எதற்காகப் பூட்டி வைத்திருக்கிறீர்கள்?” என்று, அந்த கலெக்டருக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் கதேகான் பகுதியில்  துணை பிரிவு மாஜிஸ்திரேட்டாக திரிலோச்சின் கவுர் இருந்து வருகிறார். 

திரிலோச்சின் கவுருக்கு சொந்தமான வீடு ஒன்று, தேவாஸ் மாவட்டத்தில் இருக்கிறது. திரிலோச்சின் கவுர், கடந்த சில தினங்களுக்கு முன்பு, பணி காரணமாக கதேகான் பகுதியில் தங்கி உள்ளார். 

கிட்டத்தட்ட15 நாள்களாக அவர் தேவாஸ் பகுதியில் அமைந்துள்ள வீட்டுக்கு செல்லாமல் வேலை விசயமாக வெளியில் இருந்து வந்திருக்கிறார். 

இந்த சூழலில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தன்னுடைய சொந்த வீட்டிற்கு அவர் சென்றிருக்கிறார். அப்போது, வீட்டின் உள்ளே சென்ற அவர் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

அதன் படி, அவரது வீட்டில் இருந்த எல்லாப் பொருள்களும் கலைந்து கிடந்து உள்ளது. இது குறித்து, அவர் அங்குள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார். 

இது குறித்து விரைந்து வந்த போலீசார், அந்த வீட்டை ஆய்வு செய்தனர். அப்போது, அந்த வீட்டில் ஒரு கடிதம் சிக்கி உள்ளது. அந்த கடிதத்தில், “பணமோ விலைமதிப்பு மிக்க பொருளோ இல்லாத இந்த வீட்டை எல்லாம் எதற்காகப் பூட்டி வைத்திருக்கிறீர்கள்?” என்று, அதில் எழுதப்பட்டு இருந்தது. 

இதனைப் படித்த போலீசார் சற்று அதிர்ச்சியடைந்த சித்தவிட்ட அவர்கள், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் நிலைய பொறுப்பாளர் உம்ராவ் சிங் தற்போது தகவல் தெரிவித்து உள்ளார். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.