தமிழ் சினிமா ரசிகர்களின் இடம்பெற்ற ஃபேவரட் கதாநாயகியாகவும் சிறந்த நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை ஜோதிகா. சமீபகாலமாக கதாநாயகிகளை முன்னிறுத்தும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஜோதிகாவின் திரைப்பயணத்தில் உடன்பிறப்பே 50-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் இரா.சரவணன் எழுதி இயக்கியுள்ள உடன்பிறப்பே திரைப்படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சசிகுமார், சமுத்திரகனி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க கலையரசன், சூரி ,ஷிஜா ரோஸ் ,ஆடுகளம் நரேன், வேல்ராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அழகான குடும்ப திரைப்படமாக தயாராகியிருக்கும் உடன்பிறப்பே படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். ஆயுத பூஜை வெளியீடாக வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி(நாளை) உடன்பிறப்பே திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீசாகிறது

முன்னதாக வெளியான டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது உடன்பிறப்பே படத்தின் அனைத்து பாடல்களும் வெளியானது. ஜோதிகாவின் உடன்பிறப்பே படத்தின் மொத்த பாடல்கள் அடங்கிய ஜுக்பாக்ஸ் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.