தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து தமிழில் இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த கயல் திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த நடிகை கயல் ஆனந்தி தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்தவகையில் அடுத்ததாக கயல் ஆனந்தி நடிப்பில் வெளிவரும் திரைப்படம் நதி. இயக்குனர் K.தாமரைச்செல்வன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நதி திரைப்படத்தில் சாம் ஜோன்ஸ் கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் கரு.பழனியப்பன் மற்றும் முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

MAS சினிமாஸ் சார்பில் நடிகர் சாம் ஜோன்ஸ் தயாரித்து நடிக்கும் நதி திரைப்படத்திற்கு M.S.பிரபு ஒளிப்பதிவு செய்ய, R.சுதர்சன் படத்தொகுப்பு செய்துள்ளார். லக்ஷ்மி சரவணகுமார் வசனங்களை எழுதியுள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள நதி திரைப்படத்திற்கு தினேஷ் மற்றும் விஜய ராணி நடன இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள நதி திரைப்படம் வருகிற ஜூலை 22ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், தற்போது நதி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள நதி படத்தின் ட்ரைலர் இதோ…