சின்னத்திரை வாயிலாக தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்த சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெள்ளித்திரையில் வெற்றிக்கொடி நாட்டி ஃபேவரட் கதாநாயகனாக ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார். முன்னதாக இயக்குனர் K.V.அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ப்ரின்ஸ் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படமும் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் மாவீரன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று ஜூலை 15ஆம் தேதி வெளியானது. ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் மாவீரன் திரைப்படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் விஸ்வா தயாரிக்கிறார். 

முன்னதாக இன்று மாவீரன் திரைப்படத்தை அறிவிக்கும் வகையில் வெளிவந்த டீஸர் இவர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. ஆக்சன் காமிக் ஸ்டைலில் வெளியான மாவீரன் அறிவிப்பு டீசர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விது அய்யனா ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் மாவீரன் படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.

மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஜூன் 15ஆம் தேதி பூஜையோடு தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மாவீரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அட்டகாசமான அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

First look posters of #Maaveeran #Mahaveerudu @madonneashwin@iamarunviswa @ShanthiTalkies @bharathsankar12 @vidhu_ayyanna@philoedit @Kumar_gangappan @sivadigitalart pic.twitter.com/OIHgSUOBSe

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 15, 2022