பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடந்த முக்கிய மாற்றம் ! விவரம் இதோ
By Aravind Selvam | Galatta | July 15, 2022 17:23 PM IST
![பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடந்த முக்கிய மாற்றம் ! விவரம் இதோ - Tamil Movie Cinema News பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடந்த முக்கிய மாற்றம் ! விவரம் இதோ - Tamil Movie Cinema News](https://1480864561.rsc.cdn77.org/assets/news_images/pandian-stores-serial-theni-murugan-replaces-late-nellai-siva-sujitha-kaavya-hema_1657890138.jpg)
விஜய் டிவி என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது அவர்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் தான்.அப்படி விஜய் டிவியின் சீரியல்களுக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.பல நட்சத்திரங்களை விஜய் டிவி சீரியல்கள் உருவாக்கியுள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது.ஸ்டாலின்,சுஜிதா,குமரன்,வெங்கட்,ஹேமா,காவ்யா, சரவணவிக்ரம்,சாய் காயத்ரி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.
விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடர் நல்ல TRP-யையும் பெற்று வருகிறது.விஜய் டிவியின் பெரிய வெற்றி தொடராக இந்த தொடருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.இந்த தொடரின் நட்சத்திரங்களுக்கென்று தனி தனியாக ரசிகர் பட்டாளங்கள் உருவாகியுள்ளன.பல பரபரப்பான திருப்பங்களுடன் இந்த தொடர் 900 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரில் நடித்து வந்த நெல்லை சிவா சில மாதங்களுக்கு முன் காலமானார்,தற்போது சில மாத இடைவேளைக்கு பிறகு இவருக்கு பதிலாக பல படங்களில் நடித்த பிரபல காமெடி நடிகர் தேனீ முருகன் இணைந்துள்ளார்.இவரது எபிசோடுகள் தற்போது ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.