தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சீயான் விக்ரம்.கடின உழைப்பால் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் விக்ரம்.இவரது வித்தியாசமான படங்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

அடுத்ததாக இவர் நடித்துள்ள கோப்ரா,பொன்னியின் செல்வன் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.அடுத்ததாக சீயான் விக்ரம் சில முக்கிய படங்களில் நடிக்கவுள்ளார்.இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்தது.ரஞ்சித்துடன் விக்ரம் போன்ற ஒரு நடிகர் இணைவதால் படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.ஜீ வி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.நடிகர்கள் சிவகுமார் மற்றும் ஆர்யா சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்த பூஜையில் படத்தின் முக்கிய படக்குழுவினர் கலந்துகொண்டனர்.இந்த படத்தில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.ஷூட்டிங் வெகு விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.