ரசிகர்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி நடிகராகவும் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அந்தவகையில் அடுத்ததாக விஜய் ஆண்டனி நடிப்பில் அக்னிச்சிறகுகள், காக்கி, தமிழரசன் ஆகிய திரைப்படங்கள் நிறைவடைந்து அடுத்தடுத்து வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாராகும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்கிறார். மேலும் சமீபத்தில் விஜய் ஆண்டனி நடித்த மழை பிடிக்காத மனிதன் மற்றும் ரத்தம் ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த வரிசையில் இயக்குனர் பாலாஜி.K.குமார் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகி வருகிறது கொலை திரைப்படம். விஜய் ஆண்டனி உடன் இணைந்து ரித்திகா சிங் கதாநாயகியாக நடிக்க ராதிகா சரத்குமார், மீனாக்ஷி சௌத்ரி, முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள கொலை படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கொலை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியானது. கவனம் ஈர்க்கும் அந்த மோஷன் போஸ்டர் இதோ…