உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன.

அதன் படி, இந்த 5 மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது, இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், 403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தர சட்டசபைக்கு  ஏழு கட்டங்களாகவும், 60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர்  சட்டசபைக்கு 2 கட்டங்களாகவும் இந்த தேர்தலானது நடைபெற்றது.

இப்படியாக நடைபெற்ற இந்த 5 மாநிலங்களில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்றது. ஆனால், பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி, தங்களது ஆட்சியைத் தக்க வைக்க கடுமையாக போரடியாது.

இதனையடுத்து, வாக்கு பதிவு நடந்து முடிந்த பிறகு வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் “உத்தரப் பிரதேசத்தில் பாஜக வெல்லும் என்றும், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும்” என்றும், கூறப்பட்டது.

அதன்படி, 5 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது, இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

5 மாநில தேர்தல் 10 மணி நிலவரப்படி 

உத்தரபிரதேசம் - (290/403)

பாஜக - 203

சமாஜ்வாதி - 76

பகுஜன் சமாஜ் - 04

காங்கிரஸ் - 04

மற்றவை - 03

என்கிற ரீதியில் பாஜக முன்னிலையில் இருக்கிறது.


கோவா - (40/40)

பாஜக - 17

காங்கிரஸ் - 17

ஆம் ஆத்மி - 01

திரிணாமுல்+ - 05

மற்றவை - 01

என்று, கோவாவில் பாஜக - காங்கிரஸ் இடையே  இழுபறி நீடித்து வருகிறது.


மணிப்பூர் - (56/60)

பாஜக - 27

காங்கிரஸ் - 08
 
மற்றவை - 21

என்று, மணிப்பூரிலும் பாஜக முன்னிலையில் உள்ளன.


பஞ்சாப் - 117 

ஆம் ஆத்மி - 83 
காங்கிரஸ் 18
பாஜக - 4
மற்றவை - 2

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளதால், அங்கு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கிறது என்றும் கூறப்படுகிறது. 

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 84 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது.

அதே போல், உத்தரகாண்ட் மாநிலத்திலும் பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இதனால், இந்த 5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் இருந்து வருவதால், பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புகள் பிரகமாசமாகி உள்ளன.