கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் மொத்த சவுத் இந்தியாவையும் தனது ரசிகர்களாக மாற்றியவர் ராஷ்மிகா மந்தனா.இந்த படத்தில் இவரது அழகிற்க்கும்,நடிப்பிற்கும் மயங்கிய ரசிகர்கள் இவரை கனவுக்கன்னியாக ஏற்றுக்கொண்டனர்.சில மொழிகளில் இவர் நடிக்கவில்லை என்றாலும் இவருக்கான வரவேற்பு அங்கும் அதிகமாகவே இருந்தது.

இதனை தொடர்ந்து இவர் மீண்டும் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து டியர் காம்ரேட் படத்தில் கிரிக்கெட் விளையாடும் பெண்ணாக நடித்திருந்தார்.இந்த படத்தில் நடித்தற்காக பல விருதுகளை அள்ளிக்குவித்தார் ராஷ்மிகா.ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது இந்த படம்.இந்த படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பு பலராலும் பாராட்ட பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இவர் சுல்தான்,புஷ்பா உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.இதனை தவிர சில முக்கிய படங்களிலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா.மிஷன் மஜ்னு என்ற படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் கால்பதிக்கிறார் ராஷ்மிகா.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சித்தார்த் மல்ஹோத்ரா ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த படம் ஜூன் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்,படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.