சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பெண்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சுய பாதுகாப்பு மற்றும்  அடிப்படை பெண் உரிமைகள் பற்றி தற்போது தெரிந்துகொள்ளலாம்.

ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று, சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

அதாவது, பெண்களின் மகத்தும் மிகுந்த சாதனைகளை கொண்டாடும் வகையில், உலக அளவில் இந்த மகளிர் தினம் அனைவராலும் போற்றப்பட்டு வருகிறது. 

மிக முக்கியமாக, உலகம் முழுவதும் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான பாலின ஒடுக்குமுறையை கட்டுப்படுத்தும் நோக்த்திற்காகவே, இந்த மகளிர் தினம் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அப்படியான, இந்த கொண்டாட்ட நாளில் நம் வீட்டு பெண்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உரிமைகள் மற்றும் சுய பாதுகாப்பு பற்றி ஒரு முறை பார்த்துவிடலாம்.

அதன் படி, பெண்களையும் அவர்களது உரிமைகளையும் பாதுகாக்க இந்தியாவில் ஏராளமான சட்டங்கள் இருந்தாலும், நடைமுறை சமூகத்தில் ஆண்களின் ஆதிக்கம் தான் இருந்து வருகிறது.

அதே சமயத்தில், பெண்கள் தற்போது அதிக அளவில் கல்வி கற்றவர்களாக மாறியதால், அவர்களில் பெரும்பாலனவர்கள் ஆண்களுக்கு சரிக்கு சமமானதாகவும் மாறி வருகிறார்கள். 

அந்த வகையில், பெண்கள் சுய பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றி பார்க்கும் போது, இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலன பெண்கள் வேலைக்கு செல்வதால், அவர்கள் யாரும் ஆண்களை சார்ந்திருக்கவேண்டிய சூழல் இல்லாமல், சுய காலில் நிற்கும் நிலை முதலில் வந்துவிடுகிறது.

இவற்றுடன், ஒவ்வொரு பெண்களும், கடைத்தெருக்கள், மார்க்கெட்டுக்கள், கடற்கரை, பூங்கா என அனைத்து இடங்களுக்கும் தனியகா சென்று வரும் அளவுக்கு உலக மற்றும் நடப்பு விசயங்களை இயல்பாகவே பெற்றிருக்கிறார்கள்.

- எனினும், பெண்கள் தாங்களாக யாரையும் வீட்டு வேலைக்கோ அல்லது தங்களது தேவைக்கு உதவியாளரை வைத்துக்கொள்ளும் போது அவர்கள் மீது குற்ற பின்னணி இருக்கிறதா என்பதை ஒரு முறை சரிபார்க்க வேண்டும்.

- பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, அவர்களது செல்போனை முழு சார்ஜ் போட்டு வைத்திருப்பதை உறுதி செய்வது அவசியம்.

- பெண்கள் எங்கே தனியாக சென்றாலும், அவர்களத செல்போனில் ஜிபிஎஸ் ஆன் செய்து வைத்திருப்பது மிகவும் நல்லது.

- இரவு நேரத்தில் பெண்கள் தனியாக பயணம் செய்ய நேர்ந்தால், நீங்கள் பயணிக்கும் கார் அல்லது ஆட்டோ மற்றும் பேருந்து குறித்த தகவல்களையும், தனது வீட்டினர் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவிப்பது மிகவும் அவிசயம்.

- வேலைக்கு செல்லும் பெண்கள், தாங்கள் பணி செய்யும் இடத்தில் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டத்தின் அடிப்படைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம் என்றும் பெண்ணியல் ஆர்வலர்கள் வலியுறுது்தி உள்ளனர்.

- அதன்படி, உடல் ரீதியான தொடர்பு, பாலியல் விருப்பங்களுக்கான கோரிக்கை அல்லது பாலினவாத கருத்துக்களை பேசுதல், ஆபாச படங்களை காட்டுதல் மற்றும் விரும்பத்தகாத உடல், வாய்மொழி அல்லது வாய்மொழி அல்லாத பாலியல் நடத்தை ஆகியவற்றிற்கு தண்டனை வழங்கப்படுவதை பெண்கள் தெரிந்து வைத்திருப்பது நல்லது. 

- அதே போல், வேலைக்கு செல்லும் பெண்கள் சம ஊதிய சட்டம் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம் என்று பெண்ணியல் ஆர்வலர்கள் வலியுத்துகிறார்கள்.

- மிக முக்கியமாக, குடும்ப வன்முறைக்கு எதிரான உரிமை சட்டங்களையும் அனைத்து பெண்களும் தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் நல்லது என்றும், சாதனை பெண்கள் வலியுறுத்தி கேட்டுக்கொண்டு உள்ளனர்.
 
அனைத்து பெண்களும் கர்ப்பத்தின் மருத்துவ முடிவு சட்டம் பற்றிய அடிப்படை விசயங்களை தெரிந்து வைத்துக்கொள்வெது நல்லது என்றும், பெண்ணியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.