24 வயது இளம் பெண்ணை 54 வயது சாமியார் ஒருவர் திருமணம் செய்த சம்பவத்தில் சாமியார் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பெங்களூரு பல்லாரி டவுனில் லீவிங் வாட்டர் என்ற பெயரில் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில் 54 வயதான ரவிக்குமார் என்பவர், பாதிரியாராக இருந்து வந்தார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த கோயிலுக்கு அடிக்கடி பிரார்த்தனை செய்ய வந்த 24 வயதான சுவேதா என்ற இளம் பெண்ணுடன், பாதிரியார் ரவிக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது பின் நாளில் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. 

அதன் பறிகு, அவர்கள் இருவருமாகச் சேர்ந்து காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தான், அவர்களது காதல் தீவிரமடைந்த நிலையில். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய இளம் பெண் சுவேதா, பாதிரியார் ரவிக்குமாரை திருமணம் செய்து கொண்டார் என்று தகவல்கள் வெளியானது. 

இந்த தகவல், இளம் பெண் சுவேதாவின் பெற்றோருக்குத் தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், “தங்களது மகளை பாதிரியார் ரவிக்குமார் கடத்தி சென்று விட்டதாக” பல்லாரி டவுன் காவல் நிலையத்தில் சுவேதாவின் பெற்றோர் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், பாதிரியார் ரவிக்குமார் தலைமறைவாகவே இருந்து வந்தார். போலீசாரால் பாதிரியார் ரவிக்குமார் மற்றும் இளம் பெண் சுவேதா இருக்கும் இடம் யாருக்கும் தெரியாமல் இருந்தது. இது தொடர்பாகத் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், அவர்களையும் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், மாயமான இளம் பெண் சுவேதா, சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில்,  “பாதிரியார் ரவிக்குமார், என்னை கடத்திச் செல்லவில்லை என்றும், நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்” என்றும், கூறி இருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கின் அதிரடி திருப்பமாக “மதத்தின் பெயரை பயன்படுத்தி தன்னிடம் பாதிரியார் ரவிக்குமார் 9 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கி மோசடி செய்து விட்டதாக ஒரு பெண்ணும், பாதிரியார் ரவிக்குமார் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக மற்றொரு இளம் பெண்ணும் பல்லாரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து பாதிரியார் ரவிக்குமாரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க இன்னும் தீவிரம் காட்டினார். 

அதன் நடைபெற்ற தீவிர விசாரணையில், தலைமறைவாக இருந்த பாதிரியார் ரவிக்குமாரை நேற்று பல்லாரி டவுன் போலீசார், அதிரடியாகக் கைது செய்தனர். 

அதன் பின்னர், அவரை பல்லாரி நீதிமன்றத்திலா் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப் படி போலீசார், அந்த பாதிரியாரை தங்களது காவலில் எடுத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில், “இது போன்று, வேறு ஏதாவது பெண்களிடம் ரவிக்குமார் பண மோசடி செய்தாரா?, இதே போன்று மேலும் வேறு இளம் பெண்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்தாரா?” என்கிற கோணத்திலும், போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே, 24 வயது இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்த பாதிரியார், பலாத்கார வழக்கில் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.