கடந்த நவம்பர் 26ம் தேதி முதல்  புதிய  வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லைப் பகுதிகளில் லட்சகணக்கான விவசாயிகள் 38வது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். விவசாயிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் 2 கோரிக்கைகளை மட்டும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டு உள்ளது. ஜனவரி 4ம் தேதி மீண்டும் ஒரு பேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து இருக்கிறது. 


இந்நிலையில் , 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது குறித்து உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இல்லையெனில்  ஜனவரி 6 முதல் 20 ம் தேதி வரை நாட்டின் பல பகுதிகளில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தடையை மீறி குடியரசு தினத்தன்று டெல்லியில் நுழைவோம் எனவும் பல்வேறு மாநிலங்களிலுள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் ஜனவரி 23-ஆம் தேதி நடத்தப்படும் என்றும் குடியரசு தினதன்று ஜனவரி 26-ஆம் தேதி தலைநகரான டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்படும்’’ என்று கிராந்திகரி கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் தர்ஷன் பால் தெரிவித்துள்ளார்.