தமிழ் திரையுலகில் காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படங்களால் ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குனர் சுந்தர்.சி. சிறந்த இயக்குனரான சுந்தர்.சி, சீரான தயாரிப்பாளரும் கூட. சுந்தர்.சி-யின் தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவீஸ் மூலம் இதுவரை ஹலோ நான் பேய் பேசுறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட தரமான படங்களை தயாரித்துள்ளார். தற்போது 6வது திரைப்படமான நாங்க ரொம்ப பிஸி படத்தை தயாரித்துள்ளார். கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற மாயா பஜார் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காகும். இந்தப் படத்தை பத்ரி இயக்கியுள்ளார். 

மத்திய அரசு பண மதிப்பிழப்பு செய்தபோது பலரின் வாழ்க்கையில் மிகப்பெரிய விளைவுகள் ஏற்பட்டது. அப்படி பிரசன்னா, ஷாம் மற்றும் அஸ்வின் மூவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட விளைவுகளை நகைச்சுவையாக கூறுவதே இப்படத்தின் மையக்கரு என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தில் ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின், யோகிபாபு, விடிவி கணேஷ், ஆர்.என்.ஆர். மனோகர், ரித்திகா சென், மாஸ்டர் சக்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள். 

சத்யா இசையமைக்க, கிச்சா ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனராக பிரேமும் மற்றும் நடன இயக்குனராக தினேஷும் பணியாற்றுகிறார்கள். தயாரிப்பு மேற்பார்வை பி.பாலகோபி. சென்ற லாக்டவுனில் தமிழக அரசின் விதிமுறைகளை ஏற்று இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே சன் தொலைக்காட்சியில் இந்த படம் வெளியாகிறது. தீபாவளி சிறப்பாக இந்த படம் சன் டிவி-ல் வெளியாகவுள்ளது. நாங்க ரொம்ப பிஸி படத்தின் சிறப்பு முன்னோட்டம் சமீபத்தில் ஒளிபரப்பானது. 

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. விரைவில் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்பாக அரண்மனை 3 படத்தின் ஷூட்டிங்கை தொடங்கினார் சுந்தர்.சி ஆனால், லாக்டவுனால் ஷூட்டிங் முற்றிலும் முடங்கியது. மேலும், தற்போது ஷூட்டிங்கில் 75 பேர்தான் கலந்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகள் இருப்பதால் கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்த பிறகு படத்தின் ஷூட்டிங்கை தொடங்கலாம் என்னும் திட்டத்தில் உள்ளார் சுந்தர்.சி. 

தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார். அவ்னி சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், விவேக் முக்கிய ரோலில் ரோலில் நடிக்கின்றனர். சத்யா இசையமைக்கிறார்.  அரண்மனை-3 படத்தின் படப்பிடிப்பு குஜராத் அருகே ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. ராஜ்கோட்டில் அமைந்துள்ள பிரம்மாண்ட அரண்மனையை தேர்ந்தெடுத்து, படப்பிடிப்பை நடத்தி வருகிறார் சுந்தர்.சி.

நடிகர் பிரசன்னா கைவசம் D43 திரைப்படம் உள்ளது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். 

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள திரைப்படம் பேய் மாமா. இதற்கு முன்னதாக வடிவேல் இந்த படத்தில் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களுக்காக இந்த படத்தின் ஹீரோவாக யோகிபாபு ஒப்பந்தமானார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.