தமிழ் திரையுலகில் நடிகர், பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து என்டர்டெயின் செய்து வருகிறார் தனுஷ். தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடித்தாலும் தனுஷின் ஹாலிவுட், பாலிவுட் திரைப்பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. 

கடந்த 2013-ம் ஆண்டு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார் தனுஷ். பிறகு பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சனுடன் ஷமிதாப் என்ற படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷுடன் அக்‌ஷைகுமார் மற்றும் சாரா அலிகான் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். 

இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபர் முதல் வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து தனுஷின் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி அசத்தியது. அத்ரங்கி ரே பாடல் காட்சியின் படப்பிடிப்பின் போது அங்குள்ள குரூப் டான்சர்களுடன் தனுஷ் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ட்ரெண்டானது. பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் காட்சியளித்தார் தனுஷ். இதனைத்தொடர்ந்து சில நாட்கள் முன்பு கேமராவுடன் தனுஷ் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். 

வாரணாசியில் சில முக்கிய இடங்களில் அத்ரங்கி ரே ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மதுரையில் நடைபெற்று வரும் இந்த ஷுட்டிங்கை தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து இடைவெளியில்லாமல் மூன்று மாதங்களுக்கு படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். 

இப்படம் பற்றி பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் ஆனந்த் எல் ராய், சென்ற லாக்டவுன் நேரத்தில் நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டு இனி நடக்க உள்ள ஷூட்டிங்கிற்காக தயாராகி வந்தேன். இந்த படப்பிடிப்பில் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து தான் நடத்த உள்ளோம் என்று கூறியுள்ளார். நமக்கு கிடைத்த தகவலின் படி, அத்ரங்கி ரே படத்தில் சாரா அலி கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். படத்தின் கதை இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பது போல காட்டப்பட்டு இருக்குமாம்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தனுஷ் ஒரு பாடலை பாடியிருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து தனுஷூம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். இதற்கு முன்னர் தனுஷ் பல திரைப்படங்களில் பாடியிருந்தாலும் இசைப்புயல் இசையில் முதன்முதலாக பாட இருப்பது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்ரங்கி ரே படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் D43 படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். அதைத்தொடர்ந்து கலைப்புலி S தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Had a blast singing and chatting with our very own Isai puyal @arrahman sir. #atrangire @aanandlrai @saraalikhan95

A post shared by Dhanush (@dhanushkraja) on