பாகிஸ்தானில் கல்லூரி மாணவி சக மாணவனால் துப்பாக்கி முனையில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் பைசலாபாத்தில் உள்ள அரசு கல்லூரி பல்கலைக்கழகத்தில் 20 வயதான இளம் பெண் ஒருவர் படித்து வந்தார்.

அதே கல்லூரியில், அந்த மாணவி உடன் ஷாகித் கான் என்ற மாணவனும் படித்து வந்து உள்ளான். அவர்கள் இருவரும், கல்லூரியில் நண்பர்களாக ஆனார்கள்.

அதன் தொடர்ச்சியாக, முகமது நபிகளின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, லாகூரிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சினியோத் என்ற கிராமத்திற்கு, கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி, அந்த மாணவியை ஷாகித் கான் அழைத்துச் சென்று உள்ளார்.

அப்படி, சினியோத் என்ற கிராமத்திற்கு சென்றுக்கொண்டிருக்கம் போது, அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்ற நண்பன் ஷாகித் கான், அங்கு ஏற்கனவே வந்து பதுங்கிருந்த தன் சக நண்பர்களுடன் சேர்ந்து, அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளான். ஆனால், அந்த பெண் கடும் அதிர்ச்சியடைந்து, விடப்பிடியாக மறுத்து உள்ளார். இதனையடுத்து, தனது தனது நண்பர்களுடன் துப்பாக்கி முனையில் 

அந்த மாணவியை மிரட்டி, அந்த மாணவியை அவர்கள் கூட்டாக சேர்ந்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

அந்த மாணவர்களின் காம இச்சையெல்லாம் தீர்ந்து போன பிறகு, அந்த மாணவியை அங்கிருந்து விடுவித்து உள்ளனர். இதனால், தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து எப்படியோ அந்த மாணவி, வீடு வந்து சேர்ந்தார். வீட்டிற்கு வந்ததும், தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்கார அத்து மீறில் குறித்து தனது பெற்றோரிடம் அவர் கூறி கதறி அழுதுள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், சிறுமியை அழைத்துக்கொண்டு, அங்குள்ள மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரில், “என்னுடன் படிக்கும் ஷாகித் கான் என்ற மாணவன், சினியோத் என்ற கிராமத்திற்கு என்னை கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி அழைத்துச் சென்றார். லாகூரிலிருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அந்தக் கிராமத்திற்கு, முகமது நபிகளின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக என்னை அழைத்துச் சென்றார். அப்போது, யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றதும், அவருடைய சக நண்பர்களுடன் சேர்ந்து துப்பாக்கி முனையில் வைத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்” என்று கூறியுள்ளார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அந்நாட்டு போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அப்பெண்ணை முதலில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அந்த மருத்துவப் பரிசோதனையில் அப்பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த பெண்ணுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அத்துடன், இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான ஷாகித் கானை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவனுடைய மற்ற கூட்டாளிகளையும் கைது செய்ய போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.