தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.

சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்கு என்றும் தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது அனைவரும் அறிந்ததே.சன் டிவியின் சீரியல் குடும்பத்தில் மிக முக்கியமான ஒரு குடும்பம் கல்யாண வீடு.2018 முதல் இரண்டு ஆண்டுகளாக ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த தொடர் வெற்றிநடை போட்டு வருகிறது.

திருமுருகன் இந்த தொடரை இயக்கி நடித்து வருகிறார்.இந்த தொடரில் முதலில் ஹீரோயினாக ஸ்பூர்த்தி கௌடா நடித்து வந்தார்.கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் தற்போது அவர் தொடரில் இருந்து மாற்றப்பட்டு,கன்னிகா ரவி ஹீரோயினாக நடித்து வருகிறார்.மௌலி இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தற்போது இந்த தொடரில் முதலில் ஹீரோயினாக நடித்து வந்த ஸ்பூர்த்தி கௌடாவிற்கு திருமணம் முடிந்துள்ளது.இந்த புகைப்படங்களும்.,வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இவருக்கு ரசிகர்களிடமும்,பிரபலங்களிடமும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.கலாட்டா சார்பாக ஸ்பூர்த்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

View this post on Instagram

Happy married life #Spoorthy #KalyanaVeedu #Surya

A post shared by Tamil Serials (@tamilserialsexpress) on