தமிழக சட்டசபை தேர்தல் நேற்று ஏப்ரல் 6-ம் தேதி நடந்தது. திரையுலகை சேர்ந்தவர்கள் பலரும் வந்து ஓட்டு போட்டார்கள். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனியாக வந்து வாக்களித்தார். கமல் ஹாசன் தன் மகள்களுடன் வந்தார். தல அஜித் தன் மனைவியுடன் வந்தார். வந்த இடத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

அதன் பின் தளபதி விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார். சியான் விக்ரம் தன் வீட்டில் இருந்து நடந்து வந்து ஓட்டு போட்டார். சிவகார்த்திகேயன் தன் மனைவியுடன் வந்து வாக்களித்தார். ஆனால் வாக்களிப்பது குறித்து தொடர்ந்து ட்வீட் செய்த நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் வாக்களிக்கவில்லை.

ஏப்- 1 - ஐ, 6-க்கு ஒத்தி வைக்காமல்..."ஆறு"தல் பிச்சைக்கு கை நீட்டாமல், நல்லாட்சிக்கு விரல் நீட்டுவோம், King- maker-ராக! ஆறு என்பது நாட்டின் வளம்! இரு கரைகளையும் உடைத்து வரையின்றி பாய்ச்சி எல்லோரும் எல்லாமும் பெற உரியதைத் தேர்ந்தெடுப்போம்! நாளை என்பது ஒரே ஒரு நாள் அல்ல...ஐந்தாண்டு கால குத்தகை! பொத்தானில் குத்துகையில் கவனம் கொள்வோம் என்று வாக்களிப்பது குறித்து பதிவு செய்திருந்தார் பார்த்திபன். 

நம்மை எல்லாம் ஓட்டு போடச் சொன்ன பார்த்திபன் ஏன் ஓட்டு போடவில்லை என்று இணையவாசிகள் மற்றும் திரை ரசிகர்கள் வியந்தனர். இந்நிலையில் அவர் ட்விட்டரில் இன்று கூறியிருப்பதாவது, வணக்கமும் நன்றியும்! ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு! வருத்தமும், இயலாமையும்.

இரண்டாம் தவனை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது. டாக்டருக்குக் போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன் எனவே என தெரிவித்துள்ளார். நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனின் பதிவை பார்த்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறி, உடல் நலத்தை பார்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் பார்த்திபன். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷி கண்ணா மற்றும் மஞ்சிமா மோகன் நடித்துள்ளனர்.