20 வயதிற்குள் 3 திருமணம் செய்துவிட்டு 4 வது திருமணத்திற்கு பெண் தேடும் இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் தான் நாட்டில் தான், இப்படி ஒரு விநோத சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 20 வயதான அட்னான் என்ற இளைஞர் தான், 3 திருமணங்கள் செய்துகொண்ட பிறகு, தனக்கு 4 வது திருமணம் செய்ய விரும்பி, பெண் தேடி வருபவர் ஆவார்.

இதில், என்ன ஆச்சரியம் என்றால், இந்த 4 வது திருமணத்திற்கு அந்த இளைஞர் மட்டும் பெண் தேட வில்லை. மாறாக, அவரது மற்ற 3 மனைவிகளும் சேர்ந்து பெண் தேடி வருவது தான் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

இளைஞன் அட்னான், தன்னுடைய 16 வது வயதில் முதல் திருமணம் செய்துகொண்டார். அவரது மனைவியின் பெயர் ஷீம்பல் ஆகும். அதன் பிறகு அவர் 3 ஆண்டுகள் கழித்து, அதே பகுதியைச் சேர்ந்த ஷபானா என்ற இளம் பெண்ணைப் பார்த்து 2 வதாக திருமணம் செய்துகொண்டார்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டுக்கு முன்பு அந்த இளைஞர், 3 வதாக ஷாஹிதா என்ற இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அந்த 3 மனைவிகளுக்கும் தலா ஒரு குழந்தைகள் உள்ளனர்.

மேலும், தனது 3 மனைவிகளின் பெயர்களும் ஆங்கிலத்தின் முதல் எழுத்தான 'S' என்ற எழுத்தில் தொடங்குவதால், அதே எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட பெண்ணை அவர் 4 வதாக திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து உள்ளார்.

அந்த 3 மனைவிகளுக்கும் உள்ள ஒரே பிரச்சனை என்னவென்றால், தங்களது கணவன் அவரது 3 மனைவிகள் மீது கவனம் செலுத்தாமல் இருப்பது தான் என்றும், அவர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால், அந்த 3 மனைவிகளும் மாறி மாறி தன் கணவனிடம் வாக்குவாதம் செய்து, சண்டை போடுவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த 3 மனைவிகளும் தங்களுக்குள் பேசி வைத்துக்கொண்டு, தங்களது நேரங்களைப் பிரித்து வைத்துக்கொண்டு கணவன் அட்னாவை மாறி மாறி கவனித்துக்கொண்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

அத்துடன், இது தொடர்பாக பாகிஸ்தான் ஊடக செய்தியாளர்களிடம் பேசிய அட்னான், “மாதம் மாதம் எனக்கு ஒன்று முதல் 1.15 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படும் என்றும், ஒவ்வொரு முறை எனக்குத் திருமணம் நடைபெறும் போது, எனது நிதி நிலை இன்னும் மேம்பட்டுக்கொண்டே இருப்பதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 20 வயதிற்குள் ஏற்கனவே 3 மனைவிகள் உள்ள நிலையில், அந்த 3 மனைவிகளின் சம்மதத்துடன், 4 வதாக ஒரு பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து உள்ள சம்பவம், பாகிஸ்தான் நாட்டில் மட்டுமல்லாது இணையத்திலும் பெரும் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்விற்கு, இணைய வாசிகள் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த செய்தியை, பலரும் இணையத்தில் பகிர்ந்து வருவதோ, தங்களது ஆதங்கத்தையும், சோகத்தையும் வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.