இத்தாலி நாட்டில் கொரோனா விதிமுறை மீறலில் ஈடுபட்ட தம்பதியினர் பொது இடத்தில் உதட்டோடு உதடு முத்தமிட்டுக்கொண்டதால், அந்த தம்பதிக்கு 34 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. 

உலகையே இன்னும் துரத்திக்கொண்டு இருக்கிறது கொரோனா வைரஸ் தொற்று. அந்த பாதிப்பு உலகின் எல்லா நாடுகளிலும் பரவிக் கிடக்கிறது. சில நாடுகளில் கொரோனா தாக்கத்தின் 2 வது அலையும் தற்போது வீசிக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக, உலகின் பெரும்பாலான நாடுகள் பலவும் புதிய புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி உள்ளனர். சில நாடுகளில் சில விதிமுறைகள் மிக கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், விசித்திரமான சம்பவம் ஒன்று தற்போது இத்தாலியில் அரங்கேறி உள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இத்தாலி நாட்டில் உள்ள மிலனில் பொது இடத்தில் ஒரு தம்பதியினர் முத்தமிட்டதற்காக, அவர்களுக்கு 360 டாலர் தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த பராதம் என்பது, இந்திய மதிப்பில் 34 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இத்தாலி நாட்டில் உள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, அங்கு பல்வேறு வழி காட்டுதல் நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்த வழி காட்டுதல் நெறிமுறைகள் மீறு பொது இடத்தில் செயல்பட்டதால், இந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. 

அதாவது, அக்டோபர் 9 ஆம் தேதி அன்று, இத்தாலியைச் சேர்ந்த 40 வயதான நபர் ஒருவர், போலந்து நாட்டை சார்ந்த தனது வருங்கால மனையை நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த குறிப்பிட்ட பொது இடத்தில் சந்தித்து உள்ளார். இந்த சந்திப்பின் போது, தங்களது அன்பை ஒருவரை ஒருவர் வெளிப்படுத்த நினைத்தனர். அந்த அன்பின் வெளிப்பாடாய், அந்த தம்பதிகள் ஒருவரை ஒருவரை உதட்டோடு உதடு முத்தமிட்ட நினைத்து உள்ளார். இதன் காரணமாக, அவர்கள் இருவரும் அந்த முக்கிய சாலையில் தாங்கள் முகத்தில் அணிந்திருந்த மாஸ்க்குகளை அவர்கள் அகற்றி உள்ளனர். இந்த சம்பவத்தை அங்கு காவலில் நின்றிருந்து போலீஸ் அதிகாரிகள் பார்த்து உள்ளனர். இதனையடுத்து, அந்த போலீஸ் அதிகாரிகள் அந்த ஜோடியை சூழ்ந்து உள்ளனர்.

மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது, தங்கள் இருவருக்கும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்ததற்கான ஆதாரத்தை அவர்கள் அதிகாரிகளிடம் காண்பித்து உள்ளனர். இந்த ஜோடி ஒரு ஸ்மார்ட்போனில் நிச்சயதார்த்தம் தொடர்பான படங்கள், வீடியோக்கள் மற்றும் செய்திகளை தங்களின் உறவின் சான்றாகக் காட்டி உள்ளனர். ஆனால், அதிகாரிகள் தொடர்ந்து தங்களிடமிருந்த ஆவணங்களில் அவர்களின் முகவரிகளைக் கண்டறிந்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். இருவரிடமும் முழுமையாக விசாரணை மேற்கொண்ட பிறகு, அவர்களிடம் இத்தாலியச் சட்ட விதிகளின் படி 360 டாலர் அபராதம் விதித்தனர்.

மேலும், இத்தாலி நாட்டின் விதிமுறைகள் படி, கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் பொது வெளியில் மாஸ்குகளை அணிய வேண்டும் மற்றும் ஒருவருக்கொருவர் குறைந்த பட்சம் ஒரு மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால், இந்த காட்டுப்பாடுகள் ஒன்றாக சேர்ந்து வாழும் தம்பதிகளுக்குப் பொருந்தாது.

அத்துடன், “முத்தமிட்டபோது அருகில் வேறு எந்த பொது மக்களும் இல்லாத போதிலும், தங்களுக்கு போலீசார் அபராதம் விதித்து உள்ளதாக” அந்த தம்பதியினர் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால், அந்நாட்டில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது, இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.