இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக மேற்கத்திய நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

சம்பளத்தை காரணம் காட்டி போரிஸ் ஜான்சன், அடுத்த ஆண்டு தன் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டிற்கு 150,402 பவுண்ட் சம்பளமாக பெறும் போரிஸ் ஜான்சன், அது தனக்கு போதுமானதாக இல்லை எனவும், அதைக்கொண்டு வாழ முடியாது எனவும் இதன் காரணமாக ராஜினாமா செய்ய முடிவு செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

போரிஸ் ஜான்சனுக்கு ஆறு குழந்தைகள்  உள்ளனர். அவர்களில் சிலர் மிகவும் இளம் வயதினர் என்பதால், நிதி உதவி தேவைப்படுவதாகவும் தனது முன்னாள் மனைவிக்கும் பணம் வழங்க வேண்டிய நிலையில் போரிஸ் ஜான்சன் இருப்பதாகவும் பெயர் வெளியிடாத எம்.பி ஒருவர் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

பிரிட்டிஷ் செய்தி ஊடகம் தி டெய்லி மிரர் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், பெயர் வெளியிட விரும்பாத டோரி கட்சி எம்.பி.க்கள், ஒரு செய்தித்தாள் கட்டுரையாளராக ஒரு மாதத்திற்கு, 23,000 யூரோ சம்பாதித்த போரிஸ் ஜான்சன், அவர் பிரெக்ஸிட் விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர் ஆறு மாத காலத்திற்குள் பிரதமர் பதவியிலிருந்து வெளியேற விரும்புகிறார் என்று தெரிவித்துள்ளனர்.

அந்தப் பேட்டியில், பெயர் வெளியிட விரும்பாத எம்.பி. கூறும்போது, ``போரிஸுக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர்.  சிலர் நிதி உதவி தேவைப்படும் அளவுக்கு இளைஞர்களாக உள்ளனர், “முன்னாள் மனைவி மெரினா வீலருக்கு விவாகரத்து ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அவர் ஒரு ஷெட்லோட் செலுத்த வேண்டியிருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

டோரி கட்சியின் தலைவராவதற்கு முன்னர் பிரதமர் டெலிகிராப் பத்திரிகையில் ஆண்டுக்கு 275,000 யூரோ சம்பளம் பெற்று வந்தார். மேலும் இரண்டு உரைகளை வழங்குவதிலிருந்து ஒரு மாதத்தில் 1,60,000 யூரோவையும் தனியாக சம்பாதித்தார். போரிஸ் ஜான்சன் பதவி விலகினால், பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியான இங்கிலாந்து நிதியமைச்சர் ரிஷி சுனக் நாட்டில் பிரபலமடைந்து வருகிறார்.

ஐந்து போட்டியாளர்கள் காத்திருக்கிறார்கள் என்று மிரர் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. நிதியமைச்சர் ரிஷி சுனக், வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப், பிரதமர் அமைச்சரவை அலுவலகத் தலைவர் மைக்கேல் கோவ், முன்னாள் சுகாதார அமைச்சர் ஜெர்மி ஹன்ட் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பென்னி மொர்டன்ட் முன்னணியில் உள்ளனர்.

ஆனால் இந்த ஐவரில், 300 பில்லியன் யூரோ பணத்தை கொரோனாவுக்காக கொடுத்துள்ள ரிஷி சுனக் தான் அதிகப் பேரால் விரும்பப்படும் நபராக உள்ளார் எனக் கூறப்படுகிறது. கன்சர்வேடிவ் ஹோம் வலைத்தளத்தின் சமீபத்திய கட்சி உறுப்பினர்களின் கருத்துக் கணிப்பு, 40 வயதான சுனக்கை அமைச்சரவை திருப்தி மதிப்பீடுகளில் எளிதில் முதலிடத்தில் வைத்தது. அதே நேரத்தில் போரிஸ் ஜான்சன் பட்டியலில் கிட்டத்தட்ட கடைசி நிலையில் இருந்தார்.

ஒருவேளை போரிஸ் ஜான்சன் பதவி விலகினால், அந்த இடத்திற்கு வருவதற்கு, மக்களிடையே உள்ள செல்வாக்கு மற்றும் அமைச்சரவை செயல்பாடு என அனைத்திலும் முன்னணியில் உள்ள, இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.