அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்டு ட்ரம்பும், துணை அதிபராக மைக் பென்ஸும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு எதிராக ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.

அதிபர் தேதலுக்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களான ஜோ பிடனுக்கும், கமலா ஹாரிஸுக்கும் ஆதரவாக பிரசாரம் செய்ய முன்னாள் அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்துள்ளார். அதிபர் தேர்தலையொட்டி இருதரப்பு அதிபர் வேட்பாளர்களிடையேயும் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதிபர் டிரப்பை விட 8.9 சதவிகிதம் முன்னிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து வரும் திங்கள் கிழமை முதல் ஜனநாயகக் கட்சி துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸும் பிரசாரத்தை தொடங்கவுள்ளார். இந்த நிலையில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.  

பென்சில்வேனியாவில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடனுக்காக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒருவர் மற்றொரு  வேட்பாளருக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப், ''எனக்கு எதிரான ஒபாமாவின் பிரசாரத்திற்கு அஞ்சப்போவதில்லை. அவர்கள் சரியான முறையில் தங்களது செயல்களை மேற்கொண்டிருந்தால் நான் அதிபராக வென்றிருக்க முடியாது. அவர்கள் கீழ்த்தரமான செயல்களையே செய்து வருகின்றனர். அதனால் தான் நான் அதிபராக உங்கள் முன்பு நிற்கிறேன்'' என்று கூறினார்.   

''ஒபாமா கடந்த முறை ஹிலாரியை விட கடினமாக பிரச்சாரம் செய்தார். ஆனால் வெற்றி பெற்றது நான் தான். அதனால் ஒபாமாவின் தற்போதைய பிரசாரத்திற்கு கவலைப்படப்போவதில்லை'' என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

ட்ரம்ப் 'கொரோனா' வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டும் தன் பிரசாரத்தை மீண்டும் துவக்கியுள்ளார். ஜோ பிடனும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரசார கூட்டங்களில் இருவரும் பரஸ்பரம் மற்றவரை குற்றஞ்சாட்டி பேசி வருகின்றனர்.

இரு தினங்களுக்கு முன்னர் புளோரிடாவில் நடந்த பிரசாரத்தில், ஜோ பிடன் பேசியதாவது: ``அதிபர் பதவியைப் போலவே, கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதிலும், ட்ரம்ப் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். இவரைப் போன்ற குழப்பவாதி, பிரிவினைவாதி, சுயநலவாதியை அதிபராக்கியதற்கு, இந்த நாடு மிகப்பெரிய விலையை கொடுக்க நேர்ந்துள்ளது.இந்த ஆட்சியில் கவனித்துக் கொள்ளப்பட்ட ஒரே நபர், அதிபர் ட்ரம்ப் மட்டுமே. மக்களின் நலன் பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லை. அவர் பணக்கார தொழிலதிபர் நண்பர்களுக்கு மட்டுமே உதவுவார். ட்ரம்ப் எந்த வேலையையும் செய்யவில்லை, யார் மீதும் அக்கறையும் செலுத்தவில்லை" இவ்வாறு அவர் பேசினார்.

இதன் பிறகு, பென்சில்வேனியாவில் நடந்த நிகழ்ச்சியில், ட்ரம்ப் பேசியதாவது: ``அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றிலேயே, மிகவும் மோசமான ஒரு வேட்பாளருக்கு எதிராக போட்டியிட வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான வேட்பாளர் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்ற அழுத்தம் என் மீது விழுந்துள்ளது.ஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கான வெற்றியாக இருக்கும். மற்ற சில நாடுகளின் வெற்றியாக இருக்கும். அதன்பின், இந்த நாட்டில், இடதுசாரி பயங்கரவாதத்தின் ஆட்சி தான் இருக்கும். அவர்களின் கட்டுப்பாட்டில் ஜோ பிடன் இருப்பார். சுயநல, ஊழல் அரசியல்வாதிகளின் பிடியில் இருந்து இந்த நாட்டை காப்பாற்றியுள்ளோம். மீண்டும் கைமாற விடமாட்டேன்" இவ்வாறு அவர் பேசினார்.