பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள 1 லட்சம் கேட்ட நடிகை தீபாலி போஸ்லேவை, “பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து விடுவதாக” இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 40 வயதான மராத்தி பட நடிகை தீபாலி போஸ்லே என்பவர், மும்பை ஓஷிவாரா பகுதியில் வசித்து வருகிறார். 

இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அங்குள்ள அகமது நகர் மாவட்டத்திற்குக் குடிநீர் பிரச்சினைக்காக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதான சந்தீப் வாக் என்ற இளைஞர், சிவசேனா கட்சியின் சார்பாகத் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறி, அந்த நடிகையை சந்தித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

மேலும், நடிகை தீபாலி போஸ்லேவின் செல்போன் நம்பரை, அவரிடமே அந்த இளைஞர் கேட்டு பெற்றுக்கொண்டார். 

அதன் தொடர்ச்சியாக, அடுத்த சில நாட்கள் கழித்து தேவையின்றி அந்த நடிகைக்கு அவர் தன்னுடைய செல்போன் நம்பரில் இருந்து குறுந்தகவல் அனுப்பவும் மற்றும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசவும் முயன்று உள்ளார். ஆனால், இதனைப் பிடிக்காத அந்த நடிகை சந்தீப் வாக்கின் அழைப்பை முற்றிலுமாக தவிர்த்து வந்தார். ஆனால், சந்தீப் வாக் மீண்டும் மீண்டும் அவரை தொல்லைப் படுத்திக்கொண்டே வந்ததால், ஒரு கட்டத்திற்குப் பிறகு அவரின் செல்போன் நம்பரை, அந்த நடிகை பிளாக் செய்து உள்ளார். 

அதன் தொடர்ச்சியாக, கடந்த 4 ஆம் தேதி மீண்டும் அந்த நடிகையின் செல்போன் நம்பருக்கு, சந்தீப் வாக் மற்றொரு நம்பரில் இருந்து அழைத்துப் பேசி உள்ளார். அப்போது, “எனக்குப் பிறந்தநாள் வருகிறது. இந்த விழாவில் நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும்” என்று, நடிகைக்கு அவர் அழைப்பு விடுத்தார். 

அனால், இதற்கு நடிகை தீபாலி போஸ்லே, “அப்படி என்றால் எனக்கு நீங்கள் 1 லட்சம் ரூபாய் பணம் தந்தால், நான் விழாவில் கலந்து கொள்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சந்தீப் வாக், பணம் கேட்டதற்காக, அந்த நடிகையை சரமாரியாகத் திட்டி உள்ளார். அத்துடன், அந்த நடிகையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து விடுவேன்” என்றும், அவர் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த நடிகை தீபாலி போஸ்லே, அங்குள்ள அகமது நகரில் வசிக்கும் தனது சகோதரரை நடிகை தீபாலி போஸ்லே தொடர்பு கொண்டு நடந்த விவரத்தைக் கூறி உள்ளார். இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த நடிகையின் சகோதரர், மிரட்டல் விடுத்த சந்தீப் வாக்கைத் தொடர்பு கொண்டு கடுமையாக எச்சரித்து உள்ளார்.

இதற்கு சந்தீப் வாக், அந்த நடிகையின் சகோதரரிடம் “நடிகைக்கு போதைப் பொருள் வினியோகம் செய்து வருவதாக” தவறான தகவலைப் பரப்பியதாகத் தெரிகிறது. இது பற்றி அறிந்த நடிகை தீபாலி போஸ்லே, இன்னும் அதிர்ச்சியடைந்ததோடு, இந்த பாலியல் மிரட்டல் சம்பவம் குறித்து அங்குள்ள ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அங்குள்ள அகமதுநகரில் பதுங்கி இருந்த சந்தீப் வாக்கை, பிடித்து போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அதன் பின்னர், அவரை போலீசார் மும்பை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.