மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே கடும் வாக்குவாதங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய எம்.எல்.ஏ, எம்.பிகள் சமீபத்தில் பாஜகவில் இணைந்து இருக்கிறார்கள். 


இந்நிலையில் பாஜக குப்பை போன்ற விமர்சனைகள் திரிணமுல் காங்கிரஸ் மீது வைத்து வருகிறது. அமித் ஷா  கூறுவதை போல் மேற்கு வங்களத்தில் தொழிற்சாலைகளை பூஜ்ஜியத்தில் இல்லை. மேற்கு வங்களம் நல்ல வளர்ச்சியில் தான் இருக்கிறது. நாட்டிலேயே சிறுகுறு தொழிலில் முதலிடத்தில் இருப்பது மேற்குவங்காளம். 


மத அரசியல் நடத்தி வரும் பாஜகவுக்கு , இந்தியா மதசார்ப்பினை நாடு என்பது நினைவில் இருக்கிறது. எல்லா மதத்தினருக்கும் உணர்வு இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் ஏன் தேசிய விடுமுறையாக இருக்க கூடாது. அதை ஏன்  பாஜக அரசு அதை ஏன் திரும்பப் பெற்றது? பாஜக அரசியலுக்காக என்ன வேண்டுமாலும் செய்ய நினைக்கும் கட்சி.

குடியுரிமை திருத்த சட்டம், வேளாண் மசோதா என்று குடிமக்களின் தலைஎழுத்தை மாற்ற நினைக்கிறது. ஆனால் மக்களின் விதியை அவர்களால் தீர்மானிக்க முடியாது. ” என்று மேற்கு வங்களாத்தின் முதல்வர்  மம்தா பானர்ஜி பாஜகவை சாட்டி இருக்கிறார்.