திமுக கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கும் போது, சகிகலாவையும் சேர்த்து பேசியது பெரும் சர்ச்சையை கிளம்பியது. உதயநிதி பேசிய வார்த்தைகளுக்கு அனைத்து தரப்பினராலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 


மேலும் சகிகலாவின் மாண்பை சீர்குலைக்கும் விதமாக பேசியதால், உதயநிதி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என சசிகலாவின் தம்பி மகனும், அண்ணா திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளருமான ஜெய் ஆனந்த் திவாகரன் உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

 
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், ” நான் பெண்களை தவறாக பேசவில்லை; தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. யார் மனமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று பதிவிட்டு உள்ளார்.