இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது, அப்பாவி தமிழ் இன மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவிடம் கடந்த 2019ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.


இந்த நினைவிடம் அமைக்கும் போதே இலங்கை அரசு தரப்பிலும் மற்றும் பல்கலைக்கழகம் தரப்பிலும்  கட்டுமான பணிகளை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டு இருந்தது. இருப்பினும் எதிர்ப்புகளை மீறி நினைவிடம் அமைக்கும் பணி மாணவர்களால் முடிக்கப்பட்டது.  ஆனால் இரண்டு தினங்களுக்கு முன்பு மாணவர்களின் எதிர்ப்புக்கு குரலுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டது. 


இந்நிலையில் நினைவிடம் அமைக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மாணவர்களின் தொடர் போராட்டத்தால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் மற்றும் நினைவுத் தூண் அரசின் அங்கீகாரத்துடன் அமைக்கப்படும் என்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குண ராஜன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.